கடைசி ஆசை

புத்தம் புது மலர்
மூச்சு விடும் மலர்
அப்படித்தான் பார்த்தேன்
செவிலிப் பெண்
என் கையில்
முதன் முதலாய்
என் மகளை
தந்த போது

பூமிக்கு வந்த தேவதை
குலம் காக்க வந்த
குல கொழுந்து என்று
என்னெனவோ சொல்லி
மகிழ்ந்தது என் மனம்
இன்னும் கண் கூட திறக்காத
என் மகளிடம்

தவமாய் தவமிருந்தேன்
அவள் என்னை அப்பா என்று
அழைக்கும் நாளுக்காக

யாரிடம் போட்டி போட்டதோ
வருடங்கள் வேகமாக ஓடியது

குட்டி விஞ்ஞானியை கண்டேன்
என் வீட்டில்
முதல் நாள் என் மகள்
சீருடையில் பள்ளிக்கு சென்ற போது

சிறிதும் அடம் பிடிக்கவில்லை
சிரித்த முகமாய் சென்றாள் பள்ளிக்கு

ஐந்தாம் வகுப்பு
காலாண்டை தாண்டிவிட்டாள்
என் மகள் ராணி

அப்பா இந்த முறை
நான் கிளாஸ் ல
பிரஸ்ட் மார்க் வாங்கினா
நீங்க சைக்கிள் வாங்கி தருவீங்களா
என்று தான் ஒரு வாரமாய்
கேட்டுக்கு கொண்டிருந்ததை

இன்றும் மறவாமல்
நினைவுபடுத்தையிலே
ராணியை அழைத்தது
அவள் பள்ளி வாகனம்

ஓடி சென்று ஏறினாள்
அப்பா சைக்கிள் மறந்திடதிங்க
அப்பா பாய் பா என்று முடிக்கும் முன்
பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு
புழுதியை விட்டு சென்றது
பள்ளி வாகனம்

இது தான் அவள் பேசும்
கடைசி வார்த்தை என தெரியாது
அன்று எனக்கு

சைக்கிள் வாங்கி வைத்தேன்
அதை பார்த்து ஓடி வந்து
எனக்கு அவள் தரும்
முத்தத்துக்கு ஆசை கொண்டு

வழக்கமாக வர வேண்டிய
நேரத்தில் வரவில்லை
ராணி மாலை வீடு திரும்பும் வாகனம்

அரும்பி துளிர் விட வேண்டியவள்
தெய்வமானாள்
சருகாகி உழல்கிறேன்
அவள் சுற்றி சுற்றி வந்த
வீட்டுக்குள்

இன்றோடு இரண்டு சைக்கில்
வாங்கியாகிவிட்டது
அவள் நினைவு நாளுக்கு
இன்னொரு ராணிக்கு தந்திட

எழுதியவர் : Meenakshikannan (3-Oct-12, 11:10 am)
Tanglish : kadasi aasai
பார்வை : 198

மேலே