என் கண்மணியே!
எங்கே போனாயோ
என் செல்லமே!
எங்கெல்லாம் தேடினேனே
என் கனியமுதே!
ஓடி ஒளிந்தாயோ
என் கண்மணியே!
தேடி வந்தாயோ
என் காவிரியே!
ஜீவ நதியாய் வந்து
அன்று காத்தாயே!
தமிழக ஜீவன்களும்
உன் சேய்கள் தானே!
தண்ணீர் வேண்டி எழும்
தமிழகத்தின் குரலோ
என்றும் அமுங்கிப்போகுதே
அரசியல் கழிவுகளால்
பெண்ணோடு பெண்
சேர்ந்து வாழ-உலகே
ஒத்துக் கொண்டபோது
நதிகள் இணைந்து வாழாதோ!
பாரத தேசத்தில்
தமிழகம் என்ன அந்நியமா?
பகிர்ந்து கொடுக்க மறுப்பது
கர்நாடகத்தின் அநியாயமா?
ஆனாலும் சொல்லுகிறோம்
பாரத தேசம்
பண்பாடு நிறைந்த
ஒரே நாடென்று.