வேர் இறக்கி பூத்த மழை!

ஒரு பெரிய கோடைக்கு பின்
இன்றுதான் மழைக்குள்
இறங்கியிருக்கிறேன்
குடையாய் விரிந்து

நெஞ்சுக்குள் ஆடிய நீர் உஞ்சலில்
நனைந்த படி பறக்க நினைத்து
மழையின் சிறகில் அமர்ந்தேன்
குளிர்ந்த பயணமொன்றுக்கு

நாசின் நுனிவரை தூறல் ஈரம்
கவிந்து சிலிர்த்தது இதயம்
மழை நீரானந்தம்
அது பேரானந்தம்

பூத்தது மழை ஒரு நாள் முளுக்க
நீர் பூ குப்பை ஊர் நிறைய


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (10-Oct-12, 12:58 pm)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 234

மேலே