வாழ்ந்து காட்டுவோம்

வாழ்க்கை கலையானால்
கற்றுக்கொள்ள வேண்டும் !

வாழ்க்கை சிலையானால்
வண்ணம் தீட்ட வேண்டும் !

வாழ்க்கை விலையானால்
வாங்கிக்கொள்ள வேண்டும் !

வாழ்க்கை மலையானால்
உடைத்தெறிய வேண்டும் !

வாழ்க்கை கிளையானால்
ஒன்று சேர்க்க வேண்டும் !

வாழ்க்கை நிலையானால்
உயர்த்திக்கொள்ள வேண்டும் !

வாழ்க்கை விளைவானால்
வாழ்ந்து காட்ட வேண்டும் !.

Dr.ம.பாரதிநாதன்...

எழுதியவர் : Dr.ம.பாரதிநாதன்... (10-Oct-12, 11:19 pm)
சேர்த்தது : M.Bharathinathan
பார்வை : 440

மேலே