அங்கே சாகிறான் என் தமிழன்...

ஈழத்தைக் கொன்ற இலங்கை மனிதன்,
தமிழ் இனம் கொல்ல ஈட்டி கொண்டான்..
ஈரப் பண்பு துளியும் இல்லை,
இருண்ட குணம் வேண்டிப் பெற்றாயோ..

உயிர் போகட்டும் மாய்த்துவிடு,
உற்றவள் மானம் மட்டும் சாய்த்திடாதே..
நாடு கடத்தி பாசம் பிரித்துவிடு,
சிசுக்கள் உயிர் மட்டும் நாசம் செய்யாதே..

ஏற்க மறுக்கிறோம்,
மானம் என்பதை இழந்தும் வாழ..
கேட்க நாதியில்லை,
கிடக்கிறோம் வீதியில் இழிந்த பிணமாக..

உணவு உண்டு ஏழு வாரம்,
உறக்கம் கொண்டு ஏழு மாதம்,
உயிர் பிரியும் போதினிலே,
ராணுவ கலவி மட்டும் தினந்தோறும்..
தேக பாகங்களை வெட்டிக் கொன்றுவிடு,
மானம் கொண்டு மாய்ந்து போவோம்..
உன் தாகங்களைத் தீர்க்க வேறு வழியில்லையா,
பெண்கள் மானம் மட்டும் களைந்து விடாதே..

அரசின் உதவும் கரங்கள் வேண்டவே வேண்டாம்,
ஆயுதம் மட்டும் நீட்டிவிடாதே..
அரசியல் செய்ய ஆசைப்பட்டு,
ஈழத் தமிழ் மாந்தரைக் கொன்றுவிடாதே..

ஈழம் வேண்டாம் எடுத்துக்கொள்,
எங்கள் அழு ஓலம் உனக்குக் கேட்கவில்லையா,
ஏலம் போட்டு விற்றாய் தமிழனை,
சொந்த நாட்டுக்கே அகதிகளாக..

அண்ட நாடு என்றும் வேண்டாம்,
பிறந்து உண்ட நாடு இதுவல்லவோ..
நாடு கடத்தி அகதி என்றால்,
நாடி நிற்கும் நாட்டின் எல்லையிலே..

எழுதியவர் : பிரதீப் (13-Oct-12, 10:06 pm)
பார்வை : 126

மேலே