சார்..ஒரு நிமிஷம்.! - பொள்ளாச்சி அபி .

வண்ண வண்ணமாய் நிறம் காட்டும்
பல வாசம்கொண்டதாய் குணம் காட்டும்
எண்ணம் நிறைக்கின்ற கருத்துக்களால்-இங்கு
எழுத்தால் மலர்ந்த சொந்தங்களே.!

கண்ணில் இதுவரை கண்டதில்லை
காதால் பேச்சினை கேட்டதில்லை..,
ஒன்றாய் பிறந்த சொந்தமில்லை..
இனியும் பிரிகின்ற எண்ணமில்லை.!..

உண்மை வழிகின்ற கருத்துக்களால்
உலகை மாற்றும் சக்திகளே..!
ஒன்றாய் கூடி நட்பு பாராட்ட
ஒரு வாய்ப்பு நம் வாசலில் .....

புன்னகை ஏந்தி புதுச்சேரிக்கு
புறப்பட்டு வருக வருக
புது நூல் வெளியீட்டு விழாவிற்கு !!!
இது நம் விழா என தெளிந்து......!!!

அனைவரும் நலமா.?

எழுத்தில்..,எழுத்தால் இணைந்த அன்பு சொந்தங்களின் படைப்புகள் முதன்முதலாக, “யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்” எனும் கவிதை தொகுப்பாக,வரும்-29.11.2012-அன்று மாலை,புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள இராஜராஜேஸ்வரி மண்டப அரங்கில் வெளியிடப்படுகிறது.

மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன்,சிந்தனையாளர் முனைவர் க.பஞ்சாங்கம், பன்முகப்படைப்பாளர் முனைவர்.ப.இரவிக்குமார்,புத்தகங்களே தன் முதல் தோழனாய் வாழும் சிறந்த விமர்சகர் சீனு.தமிழ்மணி என அறிஞர் பெருமக்கள்,இந்தத் தொகுப்பைப் பெருமைப்படுத்தும் விதமாக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர்.

தொகுப்புகளில் இடம் பெற்றவர்கள் மட்டுமின்றி,எழுத்தால் இணைந்த உங்கள் சொந்தங்களை பெருமைப்படுத்தும் விதமாக,நட்பைப் போற்றும் விதமாக,நல்ல வழிகாட்டிகளாக,நீ;ங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்.!.

இவ்விழாவிற்காக வரும் தோழர்கள் சிரமம் பாராது,தோழர் அகன் அவர்களிடம்,தங்கள் வருகையை உறுதி செய்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கான தங்குமிடங்கள் உள்ளிட்ட மற்ற சில ஏற்பாடுகளையும் செய்வதற்கு,விழாக் குழுவினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்தத் தகவலைப் பார்த்த படைப்பாளர்கள், இந்தத் தளத்தில் இயங்கும்,இன்னும் இதனைப் பார்க்காதவர்களுக்கும்,உங்கள் சகதோழர்களுக்கும் பகிர்ந்து கொண்டால்,விழா சிறக்க மேலும் உதவி புரிந்தவர்களாவீர்கள்.

நீங்கள் தொடர்பு கொள்வதற்கான இ.மெயில் முகவரி-
agan
123
@
ymail.
com
(உடைந்துள்ள சொற்களை ஒரே வரியாக்கினால் மின்னஞ்சல் முகவரி கிட்டும் )

மற்றும் தொலைபேசி எண். 94433 60007

வருக வருக....
புதிதாய் சந்திப்போம்.புதுச்சேரியில்.!
உங்களுக்காக ஆவலோடு காத்திருக்கும்-
அன்புடன் பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (18-Oct-12, 9:53 am)
பார்வை : 173

மேலே