வாழவைக்கும் தமிழே வணக்கம்....
உதறிய மைகள் சிதறிய விண்மீன்
எழுதிய கவிதை அழகிய இரவு
பழகிய தமிழோ இளகிய மனது
விலகிய இருளே கவிஞனின் வாழ்வு....!
உலவிய தென்றல் ரசனையின் வடிவு
நிலவிய சூழ்நிலை பூவினில் மாலை
உலகிய லின்பம் ஒவ்வொன்றும் இனிது
உதவிய தமிழே உன் எழில் அமுது.......!
எடுக்க எடுக்க தமிழ் கொடுக்கும் கவிதை
தொடுக்க தொடுக்க பூ முளைக்கும் பூவனம்
வாழவைக்கும் தமிழே வணக்கம்.....
வந்து கொண்டாடு வெற்றி உனக்கும்......!