புயல் - மரம்
![](https://eluthu.com/images/loading.gif)
வங்க கடலில் உருவாகி
எனை அழிக்கும் வரம் வாங்கி
மழையின் துணையோடு
மலை கடந்து, கடல் கொதித்து
எனை கொல்ல வருகிறது புயல் .
புதிய பெயர் கொண்டு
பூவினும் மெல்லிய பூமி தாயை
புரட்டி போட, எம தூதனாய்
எருமை கொம்பனாய்
எனை கொல்ல வருகிறது புயல் .
சாலையோரத்தில்
தனியே நிற்கிறேன்
தவியாய் தவிக்கிறேன்
இலை உதிந்து, கிளை உடைத்து
உயிர் பயத்தில் தவிக்கிறேன்
உதவிட யாருமே இல்லை
நிழல் தந்தேன்
தென்றல் தவழ்ந்தேன்
பனி குளிர்ந்தேன்
கனி இனித்தேன்
கரி புகைந்தேன்
வாழ்ந்தவர்கள் வரவில்லை
எனை வாழவைக்க
காரை காக்க
போராடும் கூட்டம்
வீட்டை காக்க
விதி செய்த கூட்டம்
ஏனோ எனை காக்காமல்
சதி செய்தது .
புயலோடு போரடி
பிழைத்த கொண்டதெல்லாம்
இளமையில் முடிந்தது
முதுமையில்
எனை கொல்ல வந்த புயலில்
வாழ்வு முடிந்தது ,
தானே எனவும்
நிஷா எனவும்
நிலம் எனவும்
அழிக்கும் புயலே
ஆள வந்து அழிக்கும் அரசியல்வாதி
போலதான் - நீயும் .