வீனஸ் பெண்ணே நீ யாரோ,,,,
வீனஸ் பெண்ணே நீ யாரோ,,,,
நான் பேச துடிக்கும் இவள் என் பெண் தோழி
அத்தனை அழகாய் வார்த்தைகள் கோர்கிறாள்
நூலில் பாமாலையாய் அவளின் உச்சரிப்புகள்
என் மரண படுக்கை இரவுகளை மாற்றியமைத்த
இவளொரு வீனஸ் தேவதை
சிக்கி முக்கி தவிக்கிறேன் அவள் சிதறல்
சிரிப்பழகில் சில நேரம் பார்வையற்றவன்
புத்தகம் வாசிக்க ஆசைப்பட்டதை போல்
துள்ளி எழுகிறது என் ரத்தநாளங்கள்
அவளின் சக்கரை கலந்த முக்கனி
அதற்றல்களில் அவ்வப்பொழுது
ஆறுதல் அடைந்தவனாய் உருமாறி
போகிறேன்
நான் அனாதையில்லை என்பதை போல்
அவளுடைய சிறு அக்கறை,,,அதில் என்னை
குழந்தையாய் மாறி அழுதுவிட்டு போ
என்கிறது என் மனம் ஆனாலும் தடுக்கிறது
என் ஆண்மை திமிர்
அவள் உதடுகள் தெறிக்கும் எச்சில் நீரது
என்னில் தெறித்து விடவே,,,நான் நித்திரை
இழந்து உத்தமம் பெற்றுவிடுகிறேன்,,அனல்
கொள்ளும் அவள் அனர்த்தங்களில் அன்பினை
உணர்ந்தவனாய் இருந்தும் அவளின் உணர்வுகளை லேசாய் உரசிப்பார்கிரேன் அந்த வார்த்தைக்கனல் மீண்டும் என்மேல் அன்பாய் ஒருமுறை மோதிவிடாதா என்பதற்காகவே ,,
என் நாட்குறிப்பு புத்தகமேந்திய அவளின்
கோப தாபங்களை நித்தம் படித்து புதியதோர்
பிறவியெடுக்கிறேன் இருந்தும் உன் நினைவுகள் என்னில் இன்னும் ஒரு உயிர் போராட்டமாய் ஏனடி,,,
தாயுமானவளே நீ என்னோடு பேசாத இந்த
நாட்களில் ஏனோ,,,உறைபனியாய் உறைந்து
உயிரற்று கிடக்கிறது என் இதயக்கூறுகள்,,,
ஆழ்ந்து கிடக்கும் என் மனதினுள் ஒரு நினைவு
வலியாய் புகுந்து வாட்டி என் ஈரக்குலைகளை
இளமை வதம் செய்கிறாய்,,,,
அனுசரன்,,,,,