அண்ணன் பாடும் தாலாட்டு

ஆராரோ பாட தாய் இல்லை என்று நீ அழுதாயோ
உனக்கு யர்ரும் இல்லை என்று நீ அழுதாயோ

யார் அடிச்சா நீ அழுக
நீ சிறு பிள்ளையா இருந்தா
தொட்டிலில் இட்டு தாலட்டிடலாம்

உனக்கு என்ன குறை வைத்தேன்
சீர் வரிசை தர வில்லையா
சீமை பட்டு தரவில்லையா
தங்கமே உனக்கு வைரத்தோடு பூட்டினேன்
அந்த வைர தோடு நஞ்சானது

உன் ஆசை கனவுகள் யாவும் கலைந்து போனது
காற்றடித்த மேகம் போல்

உன் கண்ணில் வருது கண்ணீர்
என் நெஞ்சில் வருது செந்நீர்

உன் வாழ்கை படகு சுழலில் சிக்கியது
கலங்காதே கரை சேர்ப்பேன்

ஆராரோ பாட்டு யார் பாடினால் என்ன
நீ துங்கு கண்ணே

இந்த அண்ணன் பாடும் பாட்டை கேட்டு
நீ துங்கு கண்ணே

விடியும் பொழுது உனக்கு புது வாழ்வு
உதயம் ஆகட்டும்

கோவை உதயன்

எழுதியவர் : உதயகுமார்.v (9-Nov-12, 10:46 pm)
பார்வை : 197

மேலே