காரிகை -பெரிய கைகாரி
நாசம் செய்யும் பாசக்காரி
வேசம் போடா ரோசக்காரி
உச்சி முதல் பாதம் வரை
ஒரு கோடிக்கு சொந்தக்காரி
பால்காரி பட்டு நூல்காரி
நாட்காட்டி காட்டுகின்ற
நல்லநேர பகுதிக்காரி
பூக்காரி வட்ட பொட்டுக்காரி
புன்னகை தேசத்துக்கு சொந்தக்காரி
கெண்டைக்காரி பெரிய கொண்டைக்காரி
கண்ணில் மின்னல் வைத்து
காயப் படுத்தும் தண்டைக்காரி
நாணக்காரி நாணல் இடை(க்)காரி
நானிலம் வீழ்த்தும் பாணக்காரி
பருவக்காரி நல்ல உருவக்காரி
பழரசம் தரும் பானக்காரி
மோனக்காரி தானக்காரி
உன் மோகப் பார்வை
ஒன்றே போதும்
மோட்சம் தாண்டி.