அவள் இல்லாத பொழுது
தனி அறை
கடிகார சத்தம்
தூரத்தில்
குழாயில் நீர் ஒழுகும்
ஓசை
கைபேசியில்
அவளது முகம்
விட்டெறிந்தேன்
கைபேசி இரண்டானது
கடிகாரம் தூளானது
கண் மூடினால்
அவளின் நினைவு
எனக்கே
என் மேல் கோபம்
முழுவதும்
விழித்திருந்தேன ்
அவள் இல்லாத பொழுதும் கூட
பொழுது விடிந்தது...