ஏட்டு சுரைக்காய் !
உயிர் வாழவே
உலகில் போராடும் போது
எதிர் கொண்டு வரும் உற்ற சொந்தங்கள்
கண்டுகொள்ளாது செல்ல ,
உயிர் போன பின்னே
மலர் தூவி , அஞ்சலி செய்து
நிரந்தர பிரியாவிடை கொடுக்கின்றதே !
ஏட்டுசுரைக்காய் போல்
இப்படி ஒரு சொந்தம் தேவைதானா?
இறைவா!
இதற்கு நீயே நீதிபதி !