பெண்மை
தட்டுப்பட்டு சிற்பங்களாய்
செதுக்கப்படாமல்
நிழல் தரும் மண்டபத்தூண்களாய்
உருப்பெறாது
சல்லிகளாய் சிறுவர் விரல் நுனியில்
தவழவும் தவறி
படித்துறைகளிலும் பதிக்கப் படாது
சுமைதாங்கியாய்
முதுகு உயர்த்தாமல்
வீட்டுக்கூரைக்குள்
முடங்கிப் போனது
கற்கள் மட்டுந்தானா என்ன ?...
(கீற்று தள பதிவில் இருந்து)