நல்ல தமிழில் பேச வேண்டும் எனில், பாஸ்பரஸ் குண்டுகளுக்கு தப்ப மாட்டீர்கள்...!

நல்ல தமிழில் பேச வேண்டும் எனில், பாஸ்பரஸ் குண்டுகளுக்கு தப்ப மாட்டீர்கள்...!

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.

கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டன. ஆனால் தமிழில் -

தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்க்கதிர், தமிழ்க்கனல், தமிழ்க்கிழான், தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி,தமிழ்த்தம்பி, தமிழ்த்தொண்டன்,
தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன்.

தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது
உயிராக நேசிக்கிறான்...!

நன்றி
வெங்கடேசன்

எனவே தான் திராவிடக்காரன் தமிழை அழிப்பதில் வெற்றி கண்டுள்ளான். ஆரியக்காரன் கூட இந்த அளவிற்கு தமிழுக்கு எதிராக இருந்ததில்லை. இன்று இப்பேற்பட்ட செழுமை நிரம்பிய மொழியை, தமிழக மக்கள் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள்.தமிழை என்னென்ன மொழிகளில் கலந்து பேச முடியுமோ...! அந்தெந்த மொழிகளில் கலந்து பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல மாற்றி விட்டார்கள். இவைகளை சிறப்பாக செய்தது தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவன், மலையாள மொழியை தாய் மொழியாக கொண்டவன், கன்னட மொழியை தாய் மொழியாக கொண்டவன் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து இந்த வேலையை ஒரு நாற்பது வருடங்களில் செய்து முடித்து விட்டான்.

ஆங்கிலத்தில் பேசினால் புத்திசாலி பெரும் அறிவாளி என்று தொடர்ந்து திரைப்படங்களில் தொலைக்காட்சிகளில் ஏனைய ஊடகங்களில்
தொடர் பரப்புரை செய்து வருகிறார்கள். ஆங்கிலம் பேசினால் புத்திசாலி தமிழ் பேசினால் காட்டான் அதுவும் பட்டிக்காட்டான் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஈழத்தில் மட்டுமே சிறந்த தமிழ் மொழியை பேசுபவர்களை, அந்த அழகிய தமிழ் மொழியை பேசிய மக்களை காண முடிந்தது. எனவே தான் தமிழ் மொழியை உயர்த்திப்பிடித்த விடுதலைப் புலிகளை அழித்தார்கள். கூடவே தமிழ் மொழியையா பேசுகிறாய் என்று அடிவயிற்றில் இருந்து கோபம் கொண்ட மலையாளிகள் தலைமையில் பிற மொழி வெறியர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து, சுத்தமான ஆங்கில என்று இல்லாமல் பிறமொழி கலப்பு இல்லாமல் வட மொழி கலப்பு அற்று பேசிய தமிழ் பேசும் மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்துவிட்டு, எஞ்சிய லட்சக்கணக்கான மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றி வைத்துள்ளார்கள். இந்த காரியத்தை செய்த இலங்கை அரசு இயல்பாகவே இந்தியாவிற்கு உற்ற அல்ல சிறந்த நண்பனாகத் தானே இருக்க முடியும்...!

அதனால் தான் உரத்து சொல்கிறது மத்திய அரசு, இலங்கை எங்களது நட்பு நாடு என்று. இது புரியாமல் ஏன் மீனவனை சுட்டுக் கொல்வதை தடுக்கவில்லை என்று ஒரு கூட்டம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இன்னும் நிறைய இருக்கிறது எழுதுவதற்கு. பிறிதொரு சமயங்களில் எழுதுவோம்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (31-Dec-12, 10:18 am)
பார்வை : 172

மேலே