விலையில்லாப் பொங்கல்!

பொங்கலோ! பொங்கல்!
விலையில்லாப் பொங்கல்!
ஒரு கிலோ பச்சரிசி
ஒரு கிலோ வெல்லம்
இவைகளுக்கும் மேலே..
முந்திரி,
ஏலக்காய்
எல்லாம் வாங்க
ரூபாய் நூறு...
பொங்கலோ! பொங்கல்!
விலையில்லாப் பொங்கல்!
இனிக்கும் பொங்கலே!
இது போல் நீ
அடுத்த வருடமும் வரவேண்டும்!
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
(உண்ட வீட்டுக்கு
ரெண்டகம் செய்யாமல்
உன் வாக்கை போடவேண்டும்!
அடுத்தத் தேர்தலிலும்
நாங்களே ஜெயிக்க வேண்டும்...)
எங்கிருந்தோ ஒரு குரல்....
(அவசரப்படாதே என் உடன்பிறப்பே!
அடுத்தத் தேர்தலில் உன் வாக்கு
இதைவிட நல்ல விலைபோகும்...
இரண்டு கிலோ அரிசி
இரண்டு கிலோ சர்க்கரை
முந்திரி கிசு முசு நெய்யுடன்
ஏலக்காய் எல்லாம் போட்டு
அறுசுவை பொங்கல் செய்து
இனிக்க இனிக்க இல்லங்கள் தோறும்
வீடு தேடி வரும் விலையில்லாப் பொங்கல்!
குடிமக்களுக்கு இரு நூறு ரூபாய் பணம்...
‘குடி’ மகன்களுக்கு நல்ல சரக்கு...
எல்லோரும் கொண்டாட
தொலைக்காட்சியில் புதுப்படம்...
எல்லாம் இலவசமாகத் தரும்
எண்ணத்தோடு இருக்கிறோம்
அவசரப்படாதே என் உடன்பிறப்பே!)
. ...............பரிதி.முத்துராசன்