பிரசாந்த்ஆல்டோ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரசாந்த்ஆல்டோ |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 11-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 279 |
புள்ளி | : 55 |
நான்கு ஆரஞ்சு சுளைகள்
ஜுஸ் பருகுகின்றன
நடிக்கவே தெரியாத
நடிகனுக்கு அப்பா என
பெயர் வைத்து ,
அவனுக்கு ரசிகையாய்
அவனது மகளையே
படைத்து விட்டான் இந்த
கடவுள்...
தூக்கிலிட்டாலும் துடிக்காமல் துள்ளிக்கொண்டிருக்கிறது உனது காது மடல் Jimmikki கம்மல்....
பித்தம் கொண்ட காதலால்
பித்து பிடிக்கிறது
இப்பொழுது,என்னுள்
கொண்ட பித்தம் பெண்ணே
நீ அறிவது எப்பொழுது....
தூக்கிலிட்டாலும் துடிக்காமல் துள்ளிக்கொண்டிருக்கிறது உனது காது மடல் Jimmikki கம்மல்....
நான் பேசியதற்கு பிறகு , உன் வார்த்தைக்காக காத்திருக்கும் தருணங்களே நான் காதலித்த நேரங்கள் !!!
என் வீட்டில் சோறு சுவையாக இருந்தால் என் அப்பா சாப்பிடுவார்
சோறு சூடாக இருந்தால் நான் சாப்பிடுவேன்
சோறு மிட்ச்சம் ஆக இருந்தால் மட்டுமே என் அம்மா சாப்பிடுவாள்
வெளியே இருந்து வீட்டிற்கு வருகையில் என் கை பையை பார்ப்பவள் என் தங்கை
என் சட்டை பையை பார்ப்பவன் என் தந்தை
ஆனால்
என் இரைப்பையை பார்ப்பவள் என் தாய் மட்டுமே ...
ஏனோ அவளுக்கு மட்டுமே என் பசி புரிகிறது .....
என் சிறிய பருவத்தில் மழையில் நினைந்ததை விட என் அம்மாவின் கண்ணீரில் நினைந்தது தான் அதிகம் ......
அவள் எப்பொழுதும் புடவை கட்டிய ஆணாகவே தோண்றுகிறாள் எனக்கு......
எல்லா பெண்ணிடமும் காமாம் தானே தோன்றும் அது என்ன உன்னிடம் மட்டும் காதல் தோன்றியது எனக்கு .......
உன்னை நினைத்து நினைத்து நினைந்து போயின கண்கள்...
இது என்ன உன்னை நினைத்தால் மட்டும் உதடு சிரிப்பதோடு கண்ணும் கண்ணீர் விட்டு சிரிக்கிறது.....
பற்கள் விழுந்த பிறகு தொட்டு தொட்டு பார்க்கும் நாக்கை போல நீ பிரிந்த பிறகே உன் நினைவுகளை தொட்டு பாக்கிறது என் மனம்.....
உன் நினைவுகள் எனக்கு எப்பொழுதும் அழகான குப்பைகளே, ஏனென்றால் நான் போகும் பாதையில் எல்லாம் நீ மட்டுமே இருக்கிறாய்........
உன் கண்கள் என்ன காந்தத்தால் ஆனதா என்னை இப்படி ஈர்க்கிறது.....
என்னை வசிய படுத்த உன் கண் மை போதாத......
உன் கண்களின் கண்ணீர் நான் விரும்பா மழைக்காலம்.......