துகள் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  துகள்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Jun-2020
பார்த்தவர்கள்:  611
புள்ளி:  21

என் படைப்புகள்
துகள் செய்திகள்
துகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2021 12:12 am

சுமப்பது நான்தான்
கனப்பதோ என் கணவருக்கு..
தெரியாமல் உருக்கொண்ட என்
இரண்டாம் சிசு..

மேலும்

துகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2020 11:59 pm

உன் பெரிய கை கொண்டு
கிள்ளி கொடு,
அவர் சிறிய கை கொண்டு
அள்ளிச் செல்வார்..

உனக்கு வேண்டுமாயின்
அது ஒற்றை ரூபாய்,
அவருக்கு அது நூறு பைசாக்கள்..

மனநிறைவு..
சாப்பிட்டு பாராடுபவரை விட,
சமைத்து பரிமாறுபவர்க்கு அதிகம்..
தனக்காக சாம்பாதிப்பவரை விட,
தானத்துக்காகவும் சம்பாதிப்பவர்க்கு அதிகம்..

கொடு..
கிள்ளி கொடு..
அது போதும்..
அவர்..
அள்ளிச் செல்வார்..
அவருக்கு அதுவே போதும்..

மேலும்

Deepan அளித்த படைப்பில் (public) Marutha Karuppu5ed9d68e89932 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jul-2020 4:11 pm

கழனியிலே விளைஞ்ச பயிரை
களத்து மேட்டில் கதிரடிப்பார்.
விளைஞ்சு நின்ன பூமி இப்போ
களத்து மேடா மாறிப்போச்சு.
நிலம் உழுது பயிர் செஞ்சு
வளமா எங்க வாழுறோம்?
பலமுள்ள இடைத்தரகன்
பங்குபோட்டு அள்ளுரான்.
பயிர் விளையும் நிலத்தில் இவர்
வீடுகளைக் கட்டுவார். பின்னே
பசி போக்க, துணி நனைச்சு
வயிற்றில் வச்சுக் கட்டுவார்.

தண்ணீர் ஓடும் பாதையெல்லாம்
சுத்தி சுத்தி அடைக்கிறார், எங்க
கண்ணீர் ஓடை அடைக்க மட்டும் எல்லோருமே மறுக்கிறார்.

அங்க இங்க கடன வாங்கி
பயிரை வளர்த்துக் காக்கிறோம்.
அறுப்பறுத்து நட்டமாகி
நடுத்தெருவுல நிற்கிறோம்.
கடனுக்காக உருட்டி, எங்க
கட்டைவிரலும் கடுகாச்சு.
கடன் அடைச

மேலும்

மிக்க நன்றி நண்பரே 08-Aug-2020 1:39 pm
அருமை தோழரே 08-Aug-2020 10:41 am
மிக்க நன்றி தோழரே 25-Jul-2020 7:27 pm
மிக அருமையான வரிகள் அய்யா 25-Jul-2020 6:44 pm
துகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2020 2:02 pm

தோல்வி..
தோல்வியினும் பெரும் வேதனை உண்டோ?

தோல்விக்கு அஞ்சி
தேங்கியிருந்து
அது தெரியாமலே
வாழ்வைத் தொலைத்தவரை
கேட்டுப் பார்..

மேலும்

துகள் - துகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2020 7:10 pm

செவியுணர் திறன்
இருபது ஹெர்ட்ஸ் ஐ விட
அதிகமல்லவா..
இது என்ன...!!
கருப்பு வெள்ளை பட்டாம்பூச்சியாய்
உன் கண்ணிமைகள் படபடப்பதை
என் காதுகள் மட்டும்
ஒலிபெருக்கி கொண்டு கேட்கின்றனவா..

ஓ..
இல்லையில்லை..
என் காதுகளில் ஒலிப்பது,
உன் கண்களின் படபடப்பில்
வெடவெடத்துப்போன
என்  இதயமடி பெண்ணே..

மேலும்

துகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2020 7:10 pm

செவியுணர் திறன்
இருபது ஹெர்ட்ஸ் ஐ விட
அதிகமல்லவா..
இது என்ன...!!
கருப்பு வெள்ளை பட்டாம்பூச்சியாய்
உன் கண்ணிமைகள் படபடப்பதை
என் காதுகள் மட்டும்
ஒலிபெருக்கி கொண்டு கேட்கின்றனவா..

ஓ..
இல்லையில்லை..
என் காதுகளில் ஒலிப்பது,
உன் கண்களின் படபடப்பில்
வெடவெடத்துப்போன
என்  இதயமடி பெண்ணே..

மேலும்

துகள் - துகள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2020 12:57 pm

உன் இனிமைக் குரலில்
காகத்தை கரைந்து அழைத்து,
காக்கை கூட்டில் பொறித்த தன் குஞ்சு
கூவ மறந்ததாய்க்
குயிலினங்களை குழப்புகிறாய்

அம்மா என்று
நீ என்னை அழைப்பதால்
நம் வீட்டு பசுவுக்கும்
கொஞ்சம்
பொறாமை தான் என்மேல்..

நீ தத்தித் தத்தி நடப்பது கண்டு
நடந்து பழகும் சிட்டுக்கள்..
உன் மிச்ச சோறு அமிர்த மென்று
காத்திருக்கும் நாய் குட்டிகள்..

நீ அழுது முடித்து சிரிக்கையிலே
வாடிமலர்ந்த பூ கண்டதாய்
குசலம் பேசும் பூஞ்செடிகள்..

உன் வயிற்றுக்கு
பால் வார்த்த நெஞ்சுக்கு
பால் வார்க்கும்
தூக்கத்தில் நீ சிரிக்கும் சிரிப்பு..

மேலும்

உண்மை.. குழந்தைகள் வாழ்வின் வரம்.. உங்களின் கருத்து உற்சாகமளிகிறது சகோதரரே 19-Jul-2020 11:46 am
அற்புதமான வரிகள் சகோதரியே, வீட்டில் குட்டி கவிதை இருந்தால் வாழ்க்கை இனிதாகும் 19-Jul-2020 11:31 am
துகள் - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2020 10:44 pm

#மாதங்களில் அவள் மார்கழி

திருப்பாவை பாடியவள் மகிழ்கின்றாளே
அருட்பார்வை ஏந்தியவள் சிரிக்கின்றாளே
அசையாத இமைகள் என ஆக்கினாளே
இசைபோலே இன்பந்தான் கூட்டினாளே..!

கோலங்கள் வாசலிலே போடும் முன்னே
எழில்கோலம் போலவவளைக் காண்கின்றேனே
கோலத்தில் கம்பிகளை வளைப்பது போல்
கோமகள் வளைத்துவிட்டாள் அன்பினாலே ..!

இதயத்தில் பனிபோன்றே இறங்கிவிட்டாள்
எங்கேயோ கூட்டித்தான் போகின்றாளே
இமயத்தின் சிகரத்தில் ஏற்றிவிட்டாள்
ஏறுகிறேன் நானுந்தான் மேகம் மேலே..!

எந்நாளும் மார்கழியாய் இருந்துமென்ன
என்னுள்ளே வெப்பந்தான் கூட்டுகின்றாள்
ஏகாந்தம் என்னுள்ளே விதைத்திடுவாள்
இன்பங்கள் அறுவடையும் செய்திடுவாள்

மேலும்

தடையில்லா ஓடை போல் நடை போடுகிறது உங்கள் கவிதை.. அருமை கவிஞரே 14-Jul-2020 10:57 am
துகள் - renu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2020 7:39 am

நீயில்லா இரவுகள்
நீழும் வெறுமையாய்....

இருளை அறுவடை செய்யும்
கதிரவனே...
இறுதித் துளியும் மிச்சமின்றி
களைந்து விடு வேருடன்....

நொடிகள்
நிமிடங்களைத்துரத்தினாலும்...,
நிமிடங்கள் நிதானமாய்-
நித்திரையில் உள்ளது...

நீரில்லா நிலமாய்
நெஞ்சம் வெடிக்கிறது...
நீயில்லாத்தனிமையில்....

கதிரவனை கரையேறி..
சீக்கிரம் உதிக்கச்சொல்....
காற்றிலும் அவள் பெயர்
ஒலிக்கச்சொல்....

நீழும் பகற்பொழுது-
நீண்டுகொண்டே இருக்கட்டும்...
என்னவள் என்னைச்சேரும் வரையினில்.....!

மேலும்

அருமை 20-Jul-2020 1:36 am
நன்றி தோழரே 14-Jul-2020 1:00 pm
நொடிகள் நிமிடங்களைத்துரத்தினாலும்..., நிமிடங்கள் நிதானமாய்- நித்திரையில் உள்ளது அருமையான வரிகள் 14-Jul-2020 10:49 am
துகள் - துகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2020 12:47 pm

கதிரவனுக்கு முன் கண் விழிக்கும் அவன் நினைவுகள்
அதிகாலை கனவுகளில் அனுமதியின்றி நுழையும் அதே, அவனின் பிம்பம்
நிஜம் எனை விட்டுப்பிரிந்தபின்,
நிழல் மட்டும் நிரந்தரமாகிடுமோ?
வலிகளே நான் வாங்கிய வரமோ?

ஆனாலும் மனமே,
அவனை நீ மறக்க முயன்று இருக்கலாம்,
மறத்துப் போய் இருக்கலாம்...
நொறுங்கிப் போனது ஏனோ?
அவன் நினைவுகள் அமிலமாய் உன்னை அரித்ததாலோ?

அவனில் தொலைத்த என்னையும்,
ஆயிரமாய் உடைந்த மனதையும்
தேடித் தொடங்கிய பயணம்;
காலத் தோணியில்,
கரை தெரியா கடல் பயணம்..
கரை தொடுவேனோ.. காணாமல் போவேனோ..

ஆண்டுகள் பல உருண்டோடி,
ஆழ்கடலில் அலைந்தாடி,
இதோ வந்துவிட்டேன்..
எனக்கானதோர் உலகம்
புதுக்கரையில் என் பாதம்
தென்றல் க

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே