வெங்கடேஷ் ராஜேந்திரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வெங்கடேஷ் ராஜேந்திரன் |
இடம் | : ராஜபாளையம் |
பிறந்த தேதி | : 20-Mar-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 596 |
புள்ளி | : 120 |
மதம் பிடித்த மாக்களால்,
அசுத்தப்பட்ட ஆன்மிகம்,
சிதிறிகிடக்கிறது,
சில வேடதாரி
சாமியார்களால்!.
நாவிற்கும் சொற்களுக்கும்
இடையே அமைகிறது
சொர்க்கமும் , நரகமும்
.
நாசிக்கும் சுவாசத்திற்கும்
இடையே அமைகிறது
வாழ்வும் , சாவும்
.
ஆசைக்கும்,வைராக்யத்திற்கும்
இடையே அமைகிறது
செழுமையும், வறுமையும்
.
உழைப்புக்கும்,முயற்சிக்கும்
இடையே அமைகிறது
வெற்றியும்,தோல்வியும்
.
கல்விக்கும்,அறிவுக்கும்
இடையே அமைகிறது
ஞானமும்,அஞ்ஞானமும்.
.
நேசத்திற்கும்,வேஷத்திற்கும்
இடையே அமைகிறது
காதலும்,காமமும்
முன்னெப்பொழுதும்
இப்படி இருந்ததில்லை
.
காண்கின்ற காட்சியெல்லாம்
களவாடுகிறது என் ரசனைகளை
.
செய்கின்ற செயல்களெல்லாம்
சிலிர்ப்பூட்டுகிறது என் உடலினை
.
படிக்கின்ற பாடல்களெல்லாம்
பரவசமூட்டுகிறது என் சிந்தையினை
.
கேட்கின்ற சப்தங்களெல்லாம்
இசைகளாகிறது என் காதினில்
.
தீண்டுகின்ற காற்றெல்லாம்
தென்றலாகிறது என் மேனியில்
.
உன் பார்வையின்
பரிசுத்தநேசம் என் மேல்
வீசிவிட்டு சென்றதிலிருந்து
.
முன்னெப்பொழுதும்
இப்படி இருந்ததில்லை
தலைவனால்தான் தலைவியும்
பிரசவிப்பதனால்தானோ என்னவோ,
வான்மதியும் சூரியனால்
பிரசவிக்கிறது ஒளியினை.
உறக்கத்திலும் உறங்கவில்லை நினைவுகள்
கனவிலும் நீதானடி!
பேசுவாய் என எண்ணி எதிர்பார்த்த என்னை நீ ஏமாற்றிவிட்டாய்!
ஆனாலும்
பேசாமல் நீ என்னை பார்த்து சிரித்த ஒரு நிமிடப் புன்னகை போதுமடா!
இந்த உலகையே ஜெயித்து விடுவேன் உன் அப்பன் நான்!
கோவக்காரி கொல்லப் பாக்குறா
அவ கோவத்தாலே குத்தி சாய்க்கிறா
கொடும செஞ்சே காதல் பெருக்குறா
இவ கொழந்த நெஞ்ச பாடாப் படுத்துறா
பேச வச்சே பொறும கூட்டுவா
ஆச மனசில் அனல ஏத்துவா
நேரம் போக வார்த்த பேசுவா
நெஞ்சில் தானே பால ஊத்துவா
உள்ள புகுந்து மனசா நெறஞ்சா
உசுரு முழுக்க அவளே கரஞ்சா
வார்த்த வச்சே வாழ்வக் கூட்டுவா
வாழும் காலம் பேச்சால் நீட்டுவா?
காதல் வந்த பின்னே கனவு ஒத்தை ஆச்சு
கள்ளி நெனப்பு இங்க முழுக்க நெறஞ்சு போச்சு
ஒத்த வார்த்த வச்சுத்தா மனச நீயும் வரையறுத்த
செத்த நொடி நகரயிலே சாவத்தேட வழிகொடுத்த
உன்ன நெனச்சு நானும் நொடியும் செத்துப் போனே
உலகம் மறந்து நானும் உம் பைத்தியமா ஆனே
புரியாத புதிர் நீ!
உன்னை புரிந்துகொள்ளவே எனக்கு புரியவில்லை,
இருந்தாலும்
புரிய முயற்சிக்கிறேன் புரியாமல்.