தமிழ்க் காதலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ்க் காதலன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 01-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 1 |
தமிழைக் காதலிப்பவன்
குழவியில்கல்; கோல இளமையில்கல்; கோலூன்
கிழமையில்கல்; நூல்பல தேர்ந்து –முழுவதும்
கல்;ஆர்த்(து) இராப்பகல் காணா(து) இயன்றுகல்
கல்லாதான் காயமோர் கல்!
விழுதெனவே நமைத்தாங்க
விழைவதுதான் உறவு -நாளும்
பழிபேசிப் பரிகசிக்கும்
பண்பதுவா உறவு?
இரும்பெனவே அமைந்தஓடு
ஆமையதன் உறவு -வாழை
மரத்திற்கே கூற்றுவனாய்
வரும்குலையா உறவு?
இறக்கையிலும் உடனிருக்க
இசைவதுதான் உறவு -கையில்
இருப்பிருக்க இன்புறவே
இணைவதுவா உறவு?
வற்றிவிட்ட குலத்துடனே
வாடும்புல் உறவு -தண்ணீர்
முற்றுமின்றி போகஓடும்
புள்ளினமா உறவு?
காசினியில் நற்குணத்தைக்
கண்டுவரல் உறவு -நெஞ்சில்
மாசைவைத்து முகத்தளவில்
மலருவதா உறவு?
அகத்தளவில் கலந்திருக்க
அமைவதுதான் உறவு -இனிக்கப்
பகருகின்ற வெற்றுரைக்காய்ப்
பழகுவதா உறவு?
கருமேகம் அற்றபோதும்
காணும்வில் உறவு -வானில்
இருளகன்ற
ஆழிதான் ஆங்கே அளவிலா நீர்பெற்றும்
சூழும் நதிநீர் துணைகொள்ளும் -ஆழப்
படித்தோம்நாம் என்றெண்ணிப் பற்றுவிடல் வேண்டா
படிக்கும் பழக்கத்தைப் பற்று!
6-2-2014 அன்று பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் நடத்தப்பட்ட வெண்பாப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கவிதை
காற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து
மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!
ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!
வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*
இழைபோல் இளைத்த இவன்நிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென் றாங்கு! (ஆகம் -உடல்)
ஆங்கவளைக் கண்டால் அருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! –பாங்காய்ப்பின்
என்நிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்
தன்நிலையைச் சொல்வாள் தளர்ந்து!
தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்
வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! –குளம்வாழ்
மரைமுகத் தாளும் மறுப்பாள் எனி
மையிட்ட கோலதன்
மெய்பிடித்து -நன்
செய்யிட்ட ஏரன்ன
சேறடித்து...
பொய்யற்ற மெய்கொண்ட
பொருள்விதைத்து -நாம்
உய்வுற்று வாழவோர்
உரைவகுத்து...
உடுக்கைகொள் பையெனும்
உறைகிடக்கும் -நல்
தடக்கைகொள் எழுதுகோல்
தகைவிரிப்பேன்!
ஆலிலை முனையொக்கும்
கோல்முனைகாண் -அது
சாலைக்கொண் டள்ளொணா
சமுத்திரம்தான்!
தோள்வலி இலானையும்
திறனாக்கிடும் -எழுத்
தாளனாய்ப் புலவனாய்
ஆளாக்கிடும்!
மாளிகை மண்ணாகும்
வகைகற்றகோல் -சிறு
தூளியைத் தூணாக்கும்
தொகைகற்றகோல்!
நாவென்று நாம்வாழ
நானிலத்தே -ஓர்
தாவின்றிக் கற்பிக்கும்
தனிப்பெருங்கோல்!
மூப்பென்ற ஒன்றுடலை
மோகித்தபின் -கைக்
காப்பென்று ஆகும்மரக்
கம்ப
இரவில் இருவர்
இயற்றிய ஆட்டத்(து)
உறவால் ஆடத் தொடங்குகிறான் -இவன்
இறக்கும் வரையில்
இளமை தொடங்கி
இனிதே ஆடி அடங்குகிறான்!
தினவெ டுத்தவன்
தோள்கள் தளருமுன்
துடியிடை மீதே ஆடுகிறான் -மிக
உணர்ச்சி மிக்கவன்
உள்கோ பத்தை
உலவ விட்டுப்பின் வாடுகிறான்!
முகத்தின் முன்னே
முறுவ லிப்பவன்
முதுகில் குத்தி ஓடுகிறான் -தன்
அகத்தில் தீதை
ஆட விட்டவன்
அடுத்தவன் வளர்ச்சியில் வாடுகிறான்!
தனமொன் றினையே
தகுதி யென்பவன்
தப்பின் வழியை நாடுகிறான் -நற்
குணமென் பதையே
குழியில் இட்டவன்
கோபுரம் மீதே வாழுகிறான்!
சுயநல மதையே
சூத்திர மாக்கிச்
சுகக்கணக் கொருவன் போடுகிறான் -மதி
மயங்கி மதுவில்
மனதை விட