ANUELANGO - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ANUELANGO |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 29-Nov-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 3 |
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
உன் இதழ்கள் விரிக்கும்
புன்னகை பூக்களை காணத்தான்
காலையில் என் கால்கள்
என் கண்களை அழைத்து வந்து
உன் அருகில் நிறுத்துகிறது..
உன் இதழ்கள் விரிக்காத
புன்னகை மலரை நாடிதான்
நாளும் உன் வழியெல்லாம் வளைந்து நின்று
கால்கடுக்க காத்திருக்கிறேன் ஒரு தலை காதலுடன்...
அகலாய் நீயும்
திரியாய் நானும்
ஒளியான வாழ்வில்
ஒன்றாக வேண்டும்
அணையாத தீபமாய்
ஆண்டு பல வாழ வேண்டும்...