Karthik Vetreevel - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/oikjb_26635.png)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Karthik Vetreevel |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 21-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 0 |
ஹாய்,நான் கார்த்திக்.எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து என்னுடைய கதைகளையும் படியுங்க...
நன்றி
தயங்கி தயங்கி
தவறுகளை சொல்லும்
உன் திரு திரு பார்வைகளில்
தொலைந்து தான் போகின்றன
என் கோபங்களும்...!
மௌன அழுகை
வெடித்துச் சிதறும்
வெற்றிடம்
பூரிப்பில் பூத்துக்
குலுங்கும்
பூஞ்சோலையும்
இதுதான்
நீ ,நான்
என்றில்லை
நான் மட்டுமேதான்
இங்கே
மன ஆட்சி
நடக்கும் இந்த
சாம்ராஜ்யத்தின்
இளவரசி நானே
எழுதிய சட்டங்களும்
எழுதப்படா
வரைமுறைகளும்
என் எல்லைக்கு
உட்பட்டவையே
என் கனவுகளுக்கு
கண்ணீர்த்துளிகள்
உரமானதும்
இங்கேதான்
துளிர் விடும்
ஆசைகளின்
இளந்தளிர்களை
எவரும் அறிந்திட
அழிக்க முடியாத
ரகசிய அறை
பொய்மை மரித்து
நிஜம் உயிர்ப்பெறும்
நினைவறை
என்னில் நானே
புதிதாய்ப் பிறப்பதும்
புதுப்பிக்கப்படுவதும்
இங்கு மட்டுமேதான் !!
===========================================
புத்தகம் படிக்கும் என்னவளுக்கு என்னைப்பற்றி அப்புத்தகம் அறிவுரை கூறினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் எனது எழுத்துக்கள்...
===========================================
உருவமில்லா உணர்ச்சிகள் அறிவாயா?
அவன் எழுத்தினை எடுத்துப் பாரடி...
உணர்வுகள் அனைத்தும் உனதென
புரிதலில் நீயும் உணர்வாயே!!
அளவான பேச்சினில்
அவனையும் அளந்தாய்
அவனும் ஆறடி
ஆனாலும் அறிவாளி...
அதனையும் புரிவாயே!
ஆறுதல் உரைப்பாயா?
கவியென புகழ்ந்தாய்
ஆயினும் மறுத்தாய்
என் மணம் வேதியியல்
காலம் சிதைத்திடும்
சிறுபூச்சும் தின்றிடும்...
அவன் மனம் அறிந்
எப்போது மாறின
மழை சொட்டிய
மரங்கள்
மரணம் சொட்டும்
மரங்களாக ?
=======================
இரவின் நிசப்தத்தில்
நமக்கு
எங்கோ ஊளையிடும்
ஒரு
தெருநாயின்
குரல் கேட்கிறது
தூரத்தில்
விசிலூதிச் செல்லும்
கூர்க்காவின்
குரல் கேட்கிறது
வான் துளைத்துச் செல்லும்
விமானத்தின்
குரல் கேட்கிறது
ஒரு
சிறுமியின் குரல்மட்டும்
கேட்பதில்லை
=======================
குற்றவாளிகள்
வெளியே திரிவதால்
உங்கள்
வீட்டுச்சிறுமிகளுக்கு
வீடு
சிறையாகட்டும்
=======================
பெண்கள் பிறந்தால்
வருத்தப்பட்ட காலம்
மலையேறிவிட்டதென்று
பீற்றிக் கொள்ளாதீர்கள்
பெண்கள் ப
ஒரு ஆர்வம் மிகுதியால் , கேட்கப்படும் கேள்வி இது...
எழுத்து தளத்தில் , தங்களுக்கு மிகப் பிடித்த ஒரு கவிஞர் யார்...
தாங்கள் மிக ரசிக்கும் படைப்புகளுக்கு சொந்தமான அந்த ஒரு கவிஞர் யார்...?