நிரஞ்சன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நிரஞ்சன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 30-Oct-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 238 |
புள்ளி | : 10 |
அனைவருக்கும் செந்தமிழ் வணக்கம்!
நான் வானூர்தி-பொறியியற் கல்வி பயிலும் கல்லூரி மாணவன். மேனிலைப்பள்ளிக் காலத்தில் எங்கள் தமிழாசிரியர் ஊட்டிய தமிழுணர்வால் மரபுச் செய்யுட்கள் எழுதத் தொடங்கினேன். இன்று நான் இயற்றிய மற்றும் இயற்றிக்கொண்டிருக்கும் பாக்களை உலகத்தமிழர்களோடு இவ்விணையதளம் வாயிலாகப் பகிர்ந்துகொள்கிறேன்
புன்னை மரத்தடிப் பூந்தளிர்ப் பாயதன்
நன்னிழற் றண்மையிற் றங்கினேன் - மென்றுயில்
மின்னலைப் போலவென் மெல்லுட லார்க்கவு
மின்கனா கண்களில் பூம்.
#
புன்னை மரத்திலிருந்து உதிர்ந்திருக்கும் தளிர்ப்பூக்கள் பார்க்கப் பாய்போல் விளங்க,
அம்மரத்தின் நல்ல குளுமையான நிழலில் சற்றுத் தங்கி இளைப்பாறினேன். அக்கணம்,
(நிழலின் அருமையாலும், அயர்வினாலும்) என்னுடலை, மென்மையான உறக்கம்
மின்னலாய்ச் சட்டென வந்து போர்த்திக்கொண்டது.
அப்போது, எனது கண்களில் ஒளிமிகு, ஏற்றமிகு கனவொன்று, என் கண்களில் பூக்கும்.
#
அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்.
இந்நாள் அமைந்திடுநல் இன்பமும் எந்நாளும்
நன்னாளாம் என்றிடும் நல்வாழ்வும் - உன்னாலும்
எல்லாம் இயன்றிடும் என்னும் உறுதியுடன்
எல்லாமும் பெற்றிடுவீர் இன்று!
(நேரிசை வெண்பா)
இனிய காலை வணக்கம்...
ஞா.நிறோஷ்
2015.12.28
கன்றாய் இருக்கையில் நன்றாய் விளையாடி
என்றும் அழியாத காவியம் தந்தாய்-பின்
நன்றாய் வளர்ந்து நலமிகு பால்கொடுத்தாய்
என்றும் மறவேன் உனை.
கற்றால் அறிவு வளரும் மழையைபூமி
பெற்றால் செழிப்பாய் இருக்கும் பெறாமலே
பெற்றத் தாயாய்பால் கொடுத்தாய் மனதில்
உற்றதாயாய் நின்றாய் நீ
கல்லுண்டு வாழும் மனிதனை மாற்றவே
நல்லசொல் கொண்டு திருத்த முயர்ச்சித்தேன்
புல்லுண்டு வாழ்ந்துநான் வாழவே பால்கொடுத்தாய்
சொல்லில்லை உன்னைபோற்ற வே!.
சூரியன் நட்சத்திரம் கண்டதுண்டோ ?
இல்லை நட்சத்திரம் சூரியனை கண்டதுண்டோ ?
பகல் இரவை பார்த்ததுண்டோ ?
இல்லை இரவு பகலை சந்தித்ததுண்டோ ?
ஒற்றைநாணையத்தில்
இருபக்கமும் பேசியதுண்டோ ?
வெயில் மழையை அழைத்ததுண்டோ ?
இல்லை மழை வெயிலுடன் விளையாடியதுண்டோ ?
இயற்கையின் விதி போலவே நீயும் நானுமோ ?
காணாமல் இங்கு கனவில்
கரைந்து கொண்டிருக்கிறோம் .....
ஒரு பக்கம் நீயும் ,
மறுபக்கம் நானும் ....
கடிகாரம் வேகமாய் சுத்தட்டும் ...
நொடிகள் ஓடி நிமிடம் தேடட்டும் ...
தேடி பிடித்த நிமிடத்துடன் நொடிகளும் சேர்ந்து
நேரத்தை அழைக்கட்டும் .....
நேரம் பயணம் செய்து நாட்களை சேரட்டும் ....
நாட்கள் நம்மை சந்திக்க வைக்க முயற்
மனத்தோட்டத் திற்பூத்த செங்கதிராய் என்றன்கனவிலே வாடாம லுள்ளாய் - நினதுஉளத்திலேயான் இல்லையென்ற போதிலும் நீயென்
வளச்சோலை யில்மலர்வ தேன்?நேரிசை வெண்பா
யாருக்கும் தெரியாமல் நின்று
கண்டேனே உன்னை அன்று
என்னையும் அறியாத ஒன்று
மனதில் பூத்ததே இன்று
சொல்லிவிடவா இது காதல் என்று
விஞ்ஞான உலகிலே
விலையில்லா பொருளில்லை !
நடமாடும் மனிதனுக்கு
நல்லெண்ணம் சிறிதும் இல்லை !
பணத்துமேலே மோகம் கொண்டு
பந்த பாசத்தினை பழிக்கின்றான் !
பிறர் சொல்லும் வார்த்தை கேட்டு
திசை மாறி செல்கிறான் !
சொகுசான வாழ்க்கை வாழ
தன் சொர்க்கத்தை இழக்கின்றான் !
உதவாத பணத்தை சேர்க்க
உலகெல்லாம் அலைகின்றான் !
இயற்கை அவனிடம் ...
அலைந்தது போதும் !
மனிதனே சற்று நில் !
கடலின் அலையோசை கேள்
அளவில்லா இன்பம் தரும் !
காலை எழும் சூரியனைப் பார்
உன்னை புதிதாய் உயிர்த்து விடும் !
சுற்றி திரியும் பறவையை பார்
உனக்கு பாசத்தை சொல்லி தரும் !
விலையில்லா காற்றின் மொழியை கேள்
உன் செவிக்கு இசை விருந்து
மானுடத் தன்மை யுடன்வாழ்வா னுக்கென்றும்
மேனிலை எண்ணமே தோன்றும்
புயற்காற் றுவீசி அருள்மழை பெய்தே
பயன்பல கிட்டநலன் நல்கு
கோவானா லுஞ்சான்றா னாயினுந் தன்னாற்றல்
ஆண்டா ரளுளிலே நிற்கும்
அருளளித் துத்தீ யிருளழித் தென்ற
னுருவிலா வுள்ளஞ்செம் மைசெய் வழியிற்
பொருத்து மிறைவனே நும்மாற்றற் கண்டு
பெருவியப் புற்றிருக்கி றேன்
-தமிழ் சுவை நிரஞ்சன்