இன்பரசன்.( இன்ப அரசன் ) - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இன்பரசன்.( இன்ப அரசன் ) |
இடம் | : மேலபுலம் |
பிறந்த தேதி | : 01-Aug-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 199 |
புள்ளி | : 6 |
ஒரு தமிழ் மாணவன் .....
அம்மா
நான்
நான் செல்ல வேண்டும் ,
நான் சென்றே தீர வேண்டும்
மீண்டும் நான் மாறவேண்டும்
இந்த இடத்தை விட்டு
இந்த உலகத்தை விட்டு
செல்ல வேண்டும்
கல்லறை வழியே
என் தாயின்
கருவறைக்கு ,
என் இதயம்
துடிக்க மறுக்கிறது
மீண்டும் அவளின்
அன்பை பெற துடிக்கிறது
அதனால் துடிக்க மறுக்கிறது
அறுசுவைகளும்
மறந்தது அவளின்
தாய்ப்பால் சுவையறிய
கால்களும்
கலைத்துவிட்டது
அவளின்
இடுப்புமடி இருக்கை
வேண்டி
மொழிகளும் நினைவில்
அழிந்தது
அவள் கற்றுக்கொடுக்கும்
அம்மா என்ற ஒரு
சொல்லுக்காக
என்னை மீண்டும் சுமப்பாயா
அம்மா ?????????????????
தனக்கான உணவையும் பிள்ளை உண்ண - என்
வயிறு நிறைந்தது என - அம்மா
சொல்வாள் பொய்...
தேநீர் கூட பருகாமல் மீதம் செய்து - மாலை
வரும்போது தின்பண்டம் வாங்கி வந்து-எனகென்ன
இரு தேநீர் பருகினேன் இன்று என - அப்பா
சொல்வார் பொய்....
தான் சாதிப்பதை காட்டி - நம்மை
வெறி கொண்டு சாதிக்க வைத்து பின் - ஒருமுறை தானே மறுமுறை பாப்போம் என - உடன்பிறப்புகள்
சொல்லும் பொய்....
நான் தீட்டிய ஓவியம் காட்டிலும் - உன்
ஓவியம் அழகு என குறைவான - நம்
திறனை உயர்த்தி வைத்து - நண்பர்கள்
சொல்லிடும் பொய்....
அன்பின் இந்த அழகான பொய்களுக்கு நடுவில்
பொய்யான அன்பு தோற்றே போகிறது....
அழகிகள் பிறப்பதில்லை
உருவாக்கப்படுகிறார்கள்
சில மணி நேர சிகிச்சையிலும்
சில ஆயிரம் ரூபாயிலும்
அழகு நிலைய அரிதாரத்தில்
்
அம்மாவின் அன்பு
பாசத்தை தெரிவிக்கும்!
அப்பாவின் அன்பு
அறிவை அறிவிக்கும்!
சகோதரனின் அன்பு
தைரியத்தை வரவைக்கும்!
சகோதரியின் அன்பு
நட்பை புரியவைக்கும்!
உறவினரின் அன்பு
தெளிவை உணரவைக்கும்!
எதிரியின் அன்பு
தர்மத்தை எடுத்தியம்பும்!
நண்பனின் அன்பு
நம்மை நமக்கே சொல்லிக்கொடுக்கும்!
அயலவரின் அன்பு
அவசரத்தை காட்டிநிக்கும்!
காதலியின் அன்பு
கண்ணீரை மறக்கவைக்கும்!
மனைவியின் அன்பு
வெற்றித்துனையை சேர்த்துவைக்கும்!
குழந்தையின் அன்பு
கவலையை துறக்கவைக்கும்!
இயற்கையின் அன்பு
கற்பனையை தூண்டிநிற்கும்!
மிருகங்களின் அன்பு
தனிமையை விலக்கிவைக்கும்!
இறைவனின் அன்பு
மன்னிப்பை உரைத்துநிக்க
சாப்பிட்டியா என கேட்பது
அம்மாவின் பாசம்!
சாப்பிட்டான என அம்மாவை கேட்பது
அப்பாவின் பாசம்!
கடையில் சாப்பிடுவது தெரிந்தும்
காத்திருந்து சாப்பிடவாங்க என்பது
மனைவியின் பாசம்!
அம்மா
நான்
நான் செல்ல வேண்டும் ,
நான் சென்றே தீர வேண்டும்
மீண்டும் நான் மாறவேண்டும்
இந்த இடத்தை விட்டு
இந்த உலகத்தை விட்டு
செல்ல வேண்டும்
கல்லறை வழியே
என் தாயின்
கருவறைக்கு ,
என் இதயம்
துடிக்க மறுக்கிறது
மீண்டும் அவளின்
அன்பை பெற துடிக்கிறது
அதனால் துடிக்க மறுக்கிறது
அறுசுவைகளும்
மறந்தது அவளின்
தாய்ப்பால் சுவையறிய
கால்களும்
கலைத்துவிட்டது
அவளின்
இடுப்புமடி இருக்கை
வேண்டி
மொழிகளும் நினைவில்
அழிந்தது
அவள் கற்றுக்கொடுக்கும்
அம்மா என்ற ஒரு
சொல்லுக்காக
என்னை மீண்டும் சுமப்பாயா
அம்மா ?????????????????
அம்மா
உன்னிடமிருந்து
யாசித்த எனதுயிரை
உனதென்றேன்,
இரண்டாய் பிரித்த
உனதுயிரை நீ
எனதென்றாய்
அம்மா !!!
இன்ப அரசன்
கவிதைக்காரன் பாரதி !
புது புரட்சிக்கவி பாரதி !!
பழங்கவிதையின்
இலக்கணம் உடைத்து
தலைகணம் கொண்ட
தலைமகற்கு
கடுஞ்சினமுடன்
புனைந்தாய் கவிதைகளை
புது விதையில் முளைத்த
தமிழ் மரமொன்று ஈன்ற
மரம் தாங்கும் ,
உரமுடை , விழுதாகி நின்றாய்
உன்போல் கண்டதில்லை கவிஞன்
எம்மொழியும் இதுநாள்வரை .
கண்டுவிட்டாய் உன் சொர்க்கம்
தமிழென்று !!!
இன்ப அரசன்
பாரதியையும்
பள்ளியில்
சேர்க்கவில்லை
" சாதிச்சான்றிதழ்"
இல்லையென !!!
சாதிகள் இல்லையடி பாப்பா
யாருக்கும் தெரியாது!
எனக்கு தெரியாது !
ஆரட்சியாளர்களாலும்
கண்டறிய முடியாது !
***********************************
என்னைப்படைத்தாய்
என்னை வளர்த்தாய்
தாயாய்,
தந்தையாய் ,
உறவுகளாய்,
தோழனாய்,
காதலனாய்,
ஆதரவாளனாய்
என்றும்
என்கூடவே இருக்கிறாய்!
எனக்குள்ளே இருக்கிறாய்!
நீயின்றி நானில்லை என்பேன்
துன்பம் வரும்போது
சண்டை போட்டதும்
இன்பத்தை கொடுப்பதும்
நீதானே!
******************************************
இந்த உலகிற்கு
நீயோ
புரியாத புதிர்!
உலகில் ஏழு
அதிசயமாம்
உலகையே படைத்த
நீ
உலகை இயக்குபவன்
நீ
எத்துனை அதிசயம்?
உன்னருளாலே
உன்தாள் வணங்கி
வாழ்வோம்.