mohan4390 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : mohan4390 |
இடம் | : Pondicherry |
பிறந்த தேதி | : 04-Mar-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 196 |
புள்ளி | : 10 |
ஒரு பௌர்ணமி இரவில்
உழுதுவிட்ட புழுதியின்
ஓரத்தில் ஒரு வேப்பமரம்
அதனடியில் கயிற்று கட்டிலில்
கட்டையை கிடத்தி
அண்ணார்ந்து பார்த்தேன்.
நிலவின் வெளிச்சம் என்
நித்திரையை கலைத்து
கொஞ்சம் கிறுக்க சொன்னது.
பால் நிலவொளியை
பாய்ச்சியடிக்க
நிலமகள் குளிரில் சிலிர்க்க
நிலாமகள் பனிபோர்வை கொண்டு
போர்த்துகிறாள்.
அத்தான் என்றழைத்தே
அருகில் வந்தாள்
என்னவள்.
அவளின் பஞ்சு கைபிடித்து
பிஞ்சு விரல் நீவி என்
நெஞ்சில் வைத்துக்கொண்டே
தூக்கம் தொலைத்து
விடிய விடிய பேசிய
கதையை விழித்தபடி
கேட்டிருந்தாள் நிலா மகள்.
பகல் கனவு
அதிகாலை வேளை......
குயில் பாடும் நேரம்.......
மெல்லிய குளிர்காற்று......
இமைகளைத் தழுவும்,
இனிய உறக்கத்தில்,
மலர்ந்தது ஓர் பகல்கனவு........
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்,
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்"....
என்றானே நம் பாரதி......
அவன் வாய்மொழி மெய் ஆனதே ,
50 சதவீத இடஒதுக்கீடு
பெற்றனர் பெண்கள்!....
கலங்கமில்லா காவிரி ஆறும்
துள்ளி வந்தது
நம் தமிழகத்திற்கு.......
வரதட்சணை எனும்
உயிர்க் கொல்லி நோயோ
உயிரற்றுப் போனது........
ஈழத் தமிழ் குழந்தை
சிரிப்போடு பிறந்தது - நான்
இனி அடிமையில்லை என்று!.......
அரசியலோ அற்ப்புதமாய்
மாறியது மக்களாட்சியா
அவள் வாயாடி
தேவையுள்ள இடங்களில்...
அவள் சுட்டிப்பெண்
அண்ணன்களிடம்...
அவள் செல்லப்பிள்ளை
தந்தையிடம்...
அவள் கோழை
தோழிகளிடம்...
அவள் வம்புக்காரி
வம்பளப்பவர்களிடம்....
அவள் பாசக்காரி
நேசிப்பவர்களிடம்...
அவள் !!!!!!!!!!!!!!!!!!
என்னிடம் மட்டும்...
அவள் வாயாடி
தேவையுள்ள இடங்களில்...
அவள் சுட்டிப்பெண்
அண்ணன்களிடம்...
அவள் செல்லப்பிள்ளை
தந்தையிடம்...
அவள் கோழை
தோழிகளிடம்...
அவள் வம்புக்காரி
வம்பளப்பவர்களிடம்....
அவள் பாசக்காரி
நேசிப்பவர்களிடம்...
அவள் !!!!!!!!!!!!!!!!!!
என்னிடம் மட்டும்...
மஞ்சள் நிற மாலையில்
காற்றெல்லாம் சந்தன வாசம்
தவழ்ந்து செல்லும் குழந்தை போல
மலர்களை தழுவி செல்லும் மேகங்கள்
மேகத்தின் முத்தத்தில்
வெட்கத்தில் நனைந்த மலர்கள்