ஆரியக் குமரியின் இதம்தரும் அணைப்பில் விகார மகாதேவியும் வெட்கத்தில் நாண கிளுகிளுப்பில் அவன்....! உப்பிப்போன வயிறு திடீர் செழுமையை அகிலத்துக்கு பறைசாற்ற வெற்றிலையின் உபயத்தால் உல்லாசத்தில் நரியன்....! துட்டுக்கு மெட்டெழுதி துயரத்தைக் காசாக்கி வலியின் சுவடறியா வாய்மையைத் துறந்த கற்பனைக் கவிஞனவன்......! ஆட்டுக்கல்கூட அறியா அஞ்ஞானப் பரம்பரை புலமையை அடகுவைத்த மடமையின் காரியத்தால் நவீன சாதனங்களுடன்..... ..! வாழ்க்கை என்று புரியும்..... ஆரியக் குமரிகள் சலிக்கும் போதா....அன்றி அடியிலுள்ள மண்டையோடுகள் முதுமையில் உறுத்தும்போதா..! கலைமகள் சபித்த நாவில் அழுக்கேறிய மூளையில் இறுதிவரை எதுவுமே புரியாமலும் போகலாம்..! சிந்தனைகள் மரத்து சிங்கத்தின் குகையில் அடிமையாய் நிற்கும்போது தொலைந்துபோன அடையாளம் கண்முன்னே விரியும் கலங்கலாக.!!? ================== தோழி துர்க்கா


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வைகள் : 102
4
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே