பரிதி.முத்துராசன் - கருத்துகள்

தங்கள் கருத்துக்கு நன்றி அய்யா......
எழுத்து தள நண்பர்களை மறக்க முடியுமா? வருவேன் வந்து கொண்டே இருப்பேன்

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி நண்பர்களே

நெஞ்சில் நிறைந்து இருக்கும் இது போன்ற நினைவுகள் யாருக்கும் சொல்லாத உணர்வுகள் அவ்வப்போது இப்படி எழுத்தில் வெளிப்பட்டு விடுகின்றன மற்றபடி என் சோக கதையை சொல்லவேண்டும் என்ற நோக்கம் இல்லை

ஒரு நேரம் படித்தால் இது ஒரு தேவையில்லாத பதிவாக தெரிகின்றது ஆனாலும் நெஞ்சில் உள்ள வலி ஏதோ ஒரு வகையில் வெளிப்படுகிறது..என்ன என்று புரியும் அளவுக்கு....இது எனது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம் ..தங்கள் கருத்துக்கு நன்றி

ஆமாம்..அய்யா...அது தொலை பேசியில்கூட ட்ரங்-கால் என்று புக் பண்ணி காத்திருந்து பேசும் காலம் எங்க கிராமத்தில் அப்போது தொலைபேசியும் இல்லை ...சென்னையிலிருந்து போக்குவரத்தும் சரியில்லாத காலம் ..1987

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

எல்லோரும் எழுத்துப் பட்டறையில் கற்றுக்கொண்டு கடை விரித்தார்கள்...பெரிய எழுத்தாளர் ஆகிவிட்டார்கள்

இறக்கை முளைத்ததும் கிளி பறந்து போயிடுச்சு...ஹி...ஹி....

எழுத்து ராஜேஷ்குமார் அவர்களுக்கு தமிழ் சேவை விருது சரியானதுதான் மிக்க மகிழ்ச்சி....அதுவும் அய்யா அகன் போன்ற தமிழ் ஆர்வலர் கொடுத்தது மிகவும் சிறப்பு
இருவரையும் வாழ்த்துகின்றேன்......
அன்புடன்
பரிதி.முத்துராசன்
(எழுத்து தளத்தால் எழுதப் படித்தவன்)

நிறைய நடுவர்களை வைத்து மிகச் சிறப்பாக தேர்வு நடத்தி பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்து தமிழ் மேல் உள்ள தங்கள் பற்றை மீண்டும் மூன்றாம் முறையாக நிரூபித்துவிட்டீர்கள் ...எழுத்து உலகம் உள்ளவரை தங்களை வாழ்த்தும் நண்பர் நிலா சூரியனே! வாழ்த்துக்கள் நன்றி

நன்றி தங்கள் கருத்துக்கு...பொங்கல் வாழ்த்துக்கள்

நன்றி தங்கள் கருத்துக்கு...பொங்கல் வாழ்த்துக்கள்

நன்றி தங்கள் கருத்துக்கு...பொங்கல் வாழ்த்துக்கள்

அடடா...இதில் திருத்தவே முடியலையே
மதுப்பாரினிலே என்பதை மதுக்கூடத்திலே என்று நடுவர்களே திருத்திக்கொள்ளுங்கள்...

===பொங்கு தமிழா! பொங்கு!! (பொங்கல் கவிதை போட்டி)===

பொங்கு தமிழா!-பொங்கு!!
வங்கக்கடல் அலையென-இந்த
பொங்கல் தினத்திலாவது
பொங்கு தமிழா!-பொங்கு!!

மதுப்பாரினிலே நீயும்
ஒன்றாய்ப் பொங்கியது போதும்
நன்றாய் போதையில் நீயும்
பன்றியாய்க் கிடந்ததும் போதும்

இலவசங்களுக்கு நீயும்
ஏங்கிக் கிடப்பதும் போதும்....
இடுப்பு துண்டு அவிழ
ஏமாந்து போனதும் போதும்

இன்னல் படும் தமிழர்
எங்கிருப்பினும்....
இருள் களைந்திடும்
ஈடில்லா ஒளிச்சுடராய்
இருந்திடு தமிழா! இணைந்திடு!

வஞ்சக வேடதாரிகளின்
நெஞ்சைக் கிழித்திடும்
நெம்பு கோலாய் நிமிர்ந்திடு!

புதைந்து போனாலும்
மக்கிப் போகாதே-தமிழா!
வீரிய விதையாய்
பீறிட்டு முளைத்திடு!

--------------------பரிதி.முத்துராசன்


பரிதி.முத்துராசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே