M Chermalatha- கருத்துகள்

தாங்கள் கூறியது சரியே ஆனால் பெற்றோர்கள் தரும் வாழ்க்கையை பிள்ளைகள் தன் காதலை தியாகம் செய்து மனமாற ஏற்க்கின்றனர் இருப்பினும் ‌ சில நேரங்களில் ‌‌‌‌தம் காதலித்தவரை திருமணம் ‌ செய்து இருந்தால் நன்றாக வாழ்ந்து இருக்காலாம் என்று தன் வலியை மறைத்து வாழ்கின்றனர் பெற்றோர்கள் தன் உரிமையை தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விடுதல் நல்லது அல்லவா இவ்விடத்தில் பிள்ளைகள் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர் தன் பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்து அதை இனியாவது அனைத்து பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும்

உண்மை ஆனால் இவற்றின் காரணத்தை வைத்து காதலை பிரிப்பது தவறு அல்லவா அதை ஏன் பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் ‌

காதலிக்கும் ஆண் நற்குணங்கள் கொண்டிருந்தாலும் ஜாதி ‌‌‌‌‌மதம் அடிப்படையில் தான் பெற்றோர்கள் காதலை மறுக்கின்றனர் அதுவும் ஒரு காரணம் அல்லவா நண்பர்களே

முத்தத்தின் வரிகள் முத்தாய் இருக்கிறது மிக அருமை நண்பரே

மிக்க நன்றி நண்பரே

மிக அருமையான கவிதை நண்பரே

மிக்க நன்றி நண்பரே

நான் ஏற்கனவே நிலா தலைப்பில் கவிதை எழுதி இருக்கிறேன் அதை அப்படியே paste செய்கிறேன்

வட்ட முகத்தழகியே
பால் நிறத்தவளே
நீ அடிக்கடி மேகத்தினுள் மறைவது ஏன்னம்மா
உன்னை ரசிப்பதினால் வெட்கப்பட்டு மறைந்துகொள்கிறாயா
தேய்பிறை நாளில் உன் நெற்றியை மட்டும் காட்டி
என்னை ஏங்க வைக்கிறாய்
நீ வராத அம்மாவாசை நாட்களிலும்
என்னை அமைதியின்றி அலைய வைக்கிறாய்
உன் முழுமதியை காண முப்பொழுதும் காக்க வைக்கிறாய்
காத்திருப்பதில் இருக்கும் சுகத்தை
உன்னிடத்தில்தான் நான் கண்டுகொண்டேன்
வளர்பிறையாய் வளர்ந்து பெளர்ணமியாய் பார்க்கையில்
உனதழகில் நான் மூச்சுற்று நின்றேனடி
ஓவ்வொரு நாளும் உன்னை கண்டால் கண்ணுப்பட்டுவிடும்
என்பதாலோ நீ தேய்ந்து வளர்கிறாய்
எவருக்கும் எட்டாத உயரத்தில் நீ இருந்தாலும்
எட்டி பிடிக்க என் மனம் துடிக்கிறதே
முடியாது என்றாலும் இங்கிருத்துக்கொண்டே
உன்னை கண்டு இன்பமடைந்துகொள்கிறேன்
நீயும் பூமியும் முத்தமிட்டுக்கொள்ளும் நாள்தான்
சந்திரகிரகமென அதிசய நாளானதோ
நானும் பூமியாய் மாறி உன்னிடம் வர வேண்டுமே
அகிலத்தையும் படைத்த ஆண்டவனிடம்
என்னையும் பூமியாய் படைக்க வரம் கேட்கிறேன்
ஆண்டவன் அருளிவிட்டால்
பூமியாய் நானும் நிலவாய் நீயும் முத்தமிட்டுக்கொண்டே
அனைத்து நாளும் அதிசயமாய் வாழ்ந்திருப்போம் !!!

மிக்க நன்றி தோழி

மன்னிப்பு என்பதெல்லாம் வேண்டாம் தோழியே என் மனம் புண்படவில்லை தாங்கள் சரியாகத்தானே கூறினீர்கள் இதற்கு எதுக்கு மன்னிப்பு தோழி என் தவறை காட்டியதற்கு நான் தான் நன்றி தெரிவிக்க வேண்டும் மிக்க நன்றிகள் தோழி


M Chermalatha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே