ராம் மூர்த்தி- கருத்துகள்
ராம் மூர்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [44]
- மலர்91 [21]
- Dr.V.K.Kanniappan [19]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [13]
இன்றும் பகிர்ந்தேன் ...இங்கும் முகநூலிலும்
ராஜா உன்னை படிக்கவே வந்தேன் ..முகநூலில் பகிர்கிறேன்
சமூகத்தை பாடுபவனே கவிஞன் .. அவன் எழுதும் எதுவுமே கவிதையாக உருப்பெறும்.
அது வடிவத்துடன் வருகையில் காலங்கள் கடக்கும் .கவிதையாய் நிலைக்கும் .
உன்னத படைப்பு அபி சார் .
பதில் கீழே நண்பா . இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .
ஹஹாஹ் . வணக்கம் சார் .முகநூலில் பதித்த நான் விரும்பும் சமூக கவிதைகளை மட்டுமே பதிக்க விருப்பம் .bcoz it is very difficult to travel in both the places considering day to day issues also .
நான் என்றென்றும் உங்கள் அன்பு ராம் தான் அகன் சார் .மிக்க நன்றி சார் .பேசுவோம்
மிக்க நன்றி சந்தோஷ் .
மிக்க நன்றி அம்மா தங்களின் அன்புக்கு , ஊக்கத்துக்கு , வாழ்த்துக்களுக்கு .
நன்றி தோழர் .
மிக்க நன்றி குமரேசன் .
அபி என்றொருவர் அவனை அடையாளம் காணவில்லை எனில் , ஊக்கப் படுத்தவில்லை எனில் , பேச வில்லை எனில் , நெறிப்படுத்தவில்லை எனில் ராம் வசந்த் ஒரு ஜெனரேட்டர் விற்பனனாக மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருப்பான் .
எனக்கு வியாபரத்துக்கு கங் . எழுத்துக்கு அபி .
சொல்லப் போனால் கங்கிடம் சில கெட்டவற்றையும் கற்றேன் .உங்கள் நேயம் அதையும் மாற்றிற்று.
நன்றி என்று சொல்லி அடக்கி விட முடியாது .
இருக்கும் வரை எண்ணத்திலும் , எழுத்திலும் , நாவிலும் நீங்கள் இருப்பீர்கள் ...
என் கவிதைதான் சேயோன் . காலையில் கவித்த சபாபதியும் அழைத்து இருந்தார் . நேற்றே விகடனுக்கு சொல்லி விட்டேன் .
அகன் சார் ..இந்த விருது பெறும் தகுதி இன்னும் எனக்கு வரவில்லை என எண்ணுகிறேன் .மன்னிக்கவும் .ஊக்கத்துக்கு நன்றி .
நன்றி ராஜா ..காலையில் முரளி சார் பகிர்ந்து இருந்தார் .உங்கள் கவிதைகள் முன் என் கவிதைகள் பல தோற்றுப் போகும் இந்த பரிவார தேவதைகளும் சேர்த்து .
. முக நூலில் இதே ram vasanth பெயரில் கிறுக்கி கொண்டு இருக்கிறேன் . தொடர்பில் இருப்போம் .
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும்.
நன்றி .
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும்.
நன்றி .
நன்றி கனா.. நேற்று முன்தினம் சொல்லி இருந்தார்கள் ...
உங்களுக்கு ஒரு surprise இருக்கிறது என்று .
முழுப் பக்கம் அதுவும் கடைசி பக்கத்தில் ..எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின்
உந்துதலே என்னை வெளிக் கொணர்கிறது ..
அனைவருக்கும் நன்றி ..
கீழே கவிதை ( படம் கொஞ்சம் மங்கலாக இருப்பதால் ...)
--- அக்கரைச் சீமை அழகி ----
நியூட்டன் சர்க்கிளில் சைனாகாரனின்
ஆகாரமும் பானமும் வயிற்றுக்கு ஈந்து
இணைப்பு மெட்ரோ ஒன்றிலேறி
ஜூராங் போகையில் அவளைக் காண்கிறேன்
ரயிலேறியதிலிருந்து நிகழும் இக்காட்சியில்
அவ்வப்போது அவளின் பார்வைகளும்
என்னை ஒத்தி எடுத்துக் கொண்டிருக்கின்றன
ஏதோவொரு பயணத்தில் உங்களுக்குமிது நிகழ்ந்திருக்கும்
அவள் ஆளைக் கிறங்கடிக்கும் அழகியல்ல
இருப்பினும் காரணமின்றிப் பிடித்துப் போகிறது
பெயர் என்னவோ எனப் பட்சி குலுக்கியதில்
முதல் மூன்றிடங்கள் சூசன் சாரா ஜெனிபர்
அன்றி எம் வரவேற்பாளினி நாமம் உடையவளோ ?
பெட்ரீஷியாவை சுருங்க விளிப்பதற்குத் தடுமாறாதீர்
திரிஷா என்று கூடத்தான் மிருதுவாக்கலாம்
அவளிப்போது தன் அலைபேசியை
இதமாக இயக்கிக் கொண்டிருக்கிறாள்
மெல்ல ஒரு புன்னகை அரும்புவதாகத் தெரிகிறது
நீங்கள் இருந்திருப்பின் அதை ஊர்ஜிதப் படுத்தியிருக்கலாம்
ரயிலோசைகள் அறிவிப்புகள் இவற்றினூடே
இத்தருணத்தில் பாடலொன்று நினைவுக்கு வந்து
நான் ராஜராஜ சோழன் ஆகிறேன்
நீங்கள் மரியானாகி இன்னும் கொஞ்ச நேரம் வினவலாம்
ஆனால் கதவுகள் திறக்கக் காற்று மோதுகிறது
குளம்படிகள் தாளலயத்துக்குக் கூந்தல் அசைகிறது
இறங்கியவளின் கடைசிப் பார்வை
கடைசிச் சுரத்தை மீட்டிச் சென்றேதென
ஒவ்வொன்றாய் உங்களிடம் சொல்லி விட்டேன்
அவள் யாரிடம் சொல்லியிருப்பாள் ?...
மேடம் இதை கட்டுரை பகுதியில் பதிக்கவும் . மிக்க நன்றி ...
// இது ஒன்றும் பெரிய கொலைக் குற்றம் கிடையாது. // அங்கதான் நிக்கறிங்க நீங்க ...
// இருந்தாலும், இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். //
நிச்சயம் ..ஏனெனில் ..உங்களுக்கே தெரியும் .
நான் இங்கு எழுதிக் கொண்டிருக்கும் கடைசி நாட்கள் இவை .
அது கூட இந்த போட்டி குறித்து மட்டுமே .
நன்றி ஐயா .
its a Small World .. hope & wish we meet some time , some day , some place .
Many thanks .
ஐயா ..இன்னொன்றும் சொல்லி விடுகிறேன் .
இன்று இரவு 12 மணிக்கு மேல் வரும் எந்தப் படைப்புகளும் பரிசுக்கு ஏற்கப்பட மாட்டா.
ஆனால் எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமே இந்த அவகாச நீட்டிப்பு ..
இதை சொல்ல வேண்டாம் என இருந்தேன்.
பரவாயில்லை ...
சொல்வதில் ஒன்றும் தவறில்லை .