Theetchanyaa- கருத்துகள்

நண்பர்களே
இந்த கட்டுரை இன்றைய சூழலில் மிகவும் முக்கியமான ஒன்று...சமூக மனோபாவங்களில் உருவாகயுள்ள விகாரங்களை அனுதினமும் அணுகுபவள் எனும் அளவில் சில விஷயங்களை பகிர விரும்புகிறேன்.டெல்லி பாலியல் வன்கொடுமை பரவலாக பேசப்பட்ட பின் எங்கள் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு வளையமாக அகழி எனும் அமைப்பை துவக்கினோம். எங்களுக்கு வந்த வழக்குகளில் சில மிகவும் கொடூரமானவை.மனநலம் பாதித்த பெண்ணை தந்தையே வன்புணர்வுக்கு கட்டாயபடுத்திய நிகழ்வு ஒன்று.13 வயது குழந்தை அவள்..இதுபோன்ற நேர்வுகளில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரு வகையான தீர்வுகள் தர வேண்டும்.1.அவர்களை அந்த சூழலில் இருந்து பாதுகாத்து காப்பகம் போன்ற இடங்களில் கல்வியை தொடர வகை செய்வது .2.மனோரீதியிலான தொடர் சிகிச்சை அளிப்பது. அந்த பெண்ணின் அப்பாவை கைது செய்த பின்னர் தான் அவளுக்கு தெளிவே வந்தது.புதிதாக இயற்றப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தில் இதற்கான தண்டனைகளும் தீவிரமாகவே உள்ளன.
பல வழக்குகள் நம்மால் தடுக்கக்கூடுய அளவிலேயே உள்ளன.பதின் பருவ பெண்கள் மட்டுமின்றி இல்லத்தரசிகள்கூட 47 வயதான ஒரு ஆணின் கவர்சிகரமான sms வலையில் சிக்கி இருந்தனர்.தாள முடியாத சூழலில் ஒரு பெண் தந்த புகாரின் பேரில் அவனை தொடர்ச்சியாக கண்காணித்து கைது செய்தோம்.ர்தான் பெரும் பணக்காரன் இளைஞன் என்று sms இல் அவன் சொன்னதை அப்படியே நம்,பியும் இருக்கின்றனர் படித்த பல பெண்களும்...
இப்போதைய தொழில்நுட்ப வளர்சிகளில் அனைவரும் கவனத்துடன் இருக்கவேண்டும்,வேலை இடங்களில் பயணங்களில் ஏற்படும் சிறு தொல்லையும் பெரிதாகக்கூடும். எனவே எதிர்க்கவும் கூச்சலிடவும் குழந்தை பருவத்தில் இருந்தே சொல்லி தர வேண்டும்.எப்போதும் நமக்கு நெருக்கமானவர்களால் தான் பாலியல் தொல்லைகள் ஏற்படுகின்றன.அவற்றை குறித்து பிள்ளைகள் சொல்வதற்கு பெற்றோர் இடம் தர வேண்டும்.வீட்டில் தொடங்கி சமூகம் வரை சுத்தம் செய்தால் மட்டுமே இந்த அவலத்தை நீக்க முடியும்.....கட்டுரைக்கு பாராட்டுக்கள் நண்பரே..
அக்கறையுடன் தீட்சண்யா

பதிவுக்கு நன்றி நண்பரே

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி நண்பரே...

நன்று.....அனுபவங்களை எழுதும் போது அழகாகின்றன படைப்புகள் ....

நன்றி நண்பரே...

மிக்க நன்றி தோழரே...நிறைய எழுத முயல்கிறேன் ...

மிக்க நன்றி நண்பர்களே...


Theetchanyaa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே