மெட்ராஸ் கவிஞன்...!!!(தில்லிருந்தா லவ்வுங்க)

நான் இன்னா சொல்ல வரேன்னு
மனசுல நல்லா ஏத்திகோங்க பா..!
அப்பால புரியும் இன்னாத்துக்கு
இவன் இப்படி சொன்னான்னு...!!
அப்புடி தான் ஒரு நாளு
நல்ல சொக்கா போட்டுகினு,
பாத்தவுடனே பிகுலு விடுற மாதிரி,
இப்பிடிகா என் வூட்டாண்ட வழியா
போனா அந்த செம பிகரு..!!
அவள பாத்தவுடன பத்திகிச்சு பா,
ரெண்டாவது நாளு
சும்மா கில்லி மாதிரி
நான் சொக்கா போட்டுகினு
வூட்டாண்ட நின்னேன்..!
அவள கலாய்க்கலாம்னு
இட்டுகினு வர சொன்னா
நமக்கு பல்பு வுட்டுட்டு
மொறச்சுகினே போய்ட்டா பா..!!
எனக்கு செம காண்டு ஆச்சு பா,
இன்னா பண்றதுன்னு புரியாம,
மறுநாளு சல்பேட்டா ஏத்திகினு
அந்த கல்லு மேல குந்திகினு இருந்தேன்.
இன்னான்னு புரில பா,
அந்த பிகரு நம்மல பாத்து வந்திச்சு,
எனக்கு மெருசல் ஆகி
ஜகா வாங்கலாம்னு தோனுச்சு..!!
ஓடினா மெரிச்சுருவேன் சொல்லிட்டா பா.!!
டேய் கஸ்மாலம் நில்லுடா
எங்கடா அப்பீட்டு ஆகுற,
சோமாரி தனியா வந்தா கலாய்ப்பயா..??
சவுண்டு விட்டுச்சு பா அந்த பொண்ணு.
எனக்கு ஒரே பேஜாரா போச்சு பா,
நானும் பீட்டர் வுட்டு பாத்தேன்
பீலா வுட்டு பாத்தேன்,
ஒன்னியுமே அவ கிட்ட ஆகல பா..!
அவள டம்மி பீசுன்னு நினச்சேன்,
நம்மல மட்டை பண்ணிட்டு
டர் ஆக்கிட்டு போய்ட்டா..!!
அதனால பசங்களா
கன்பீஸ் ஆகாதிங்க,
தில்லிருந்தா லவ்வுங்க,
இல்லனா வுடுங்க,
உன்ன தேடி யாராச்சும் வருவாங்கா பா..!!