எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
விழிகள் மூடினாலும் உன் உருவம் உடலுக்குள் ஊடுருவுகிறது
மனதுக்கு சுகம் தந்து உறக்கத்தை நீ தந்தாய், இன்று என் மனதோடு நீ.
என் மின்னூல் " யாருக்காக," - இது ஒரு Pustaka வெளியிடு ...
விவாதங்கள் தொடரட்டும் ...
என்றும் அன்புடன்...
செல்வன் ராஜன்.
இந்த சுட்டியில் காண்க ....
https://www.pustaka.co.in/home/author/செல்வா
இதைப் பற்றிய விளக்கம். கீழே கண்ட படவரியில்
https://www.instagram.com/reel/DE3jzKpPI9p/?igsh=YzljYTk1ODg3Zg==
https://www.instagram.com/reel/DE3kTdgvkGM/?igsh=YzljYTk1ODg3Zg==
மேலும் விவரங்களுக்கு : என் வலையொளியில்
https://youtube.com/@selvasil1961?si=6JoaUtE8SJ-௨ஜேபி௬ஞ்
POWER- poets, Orators, essayist, writers - all look forward to YOU READERS for support.
என் மின் நூல் வெளியீடுகவிதைகள், கட்டுரைகள் , கதைகள்...விவாதம்... (செல்வன் ராஜன்)
18-Jan-2025 7:54 am
என் மின் நூல் வெளியீடு
கவிதைகள், கட்டுரைகள் , கதைகள்...
விவாதம் தொடரட்டும் .....
இந்த சுட்டியில் காண்க ....
https://www.pustaka.co.in/home/author/செல்வா
இதைப் பற்றிய விளக்கம். கீழே கண்ட படவரியில்
https://www.instagram.com/reel/DE3jzKpPI9p/?igsh=YzljYTk1ODg3Zg==
https://www.instagram.com/reel/DE3kTdgvkGM/?igsh=YzljYTk1ODg3Zg==
மேலும் விவரங்களுக்கு : என் வலையொளியில்
https://youtube.com/@selvasil1961?si=6JoaUtE8SJ-2JF6A
தன்னை உருஞ்சுகிறது என்றுதெரிந்தே புழு பூச்சிகளுக்குஉணவளிக்கிறது செடி... (இறையன்பன்)
27-Dec-2024 12:55 pm
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு In... (hanisfathima)
09-Dec-2024 11:43 am
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
In sandy soil, when deep you delve, you reach the springs below;
The more you learn, the freer streams of wisdom flow
- மு.வரதராசன் விளக்கம்மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும். (ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
அனைவரது விளக்கமும் ஒன்றையே விளக்குகிறது.
என்ன செய்ய ?
என்ன செய்ய, தனிமை தான்.
தோள்களில் கடமைகளை சுமக்கும் போது
உதடுகளில் சிரிப்பு மறந்து போனது,
என்ன செய்ய, தனிமை தான் !
வயதிற்கேற்ப வாழ்க்கை மறந்து
வாழ்வதே போராட்டம் என்ற போதும்,
என்ன செய்ய, தனிமை தான் !
நாளைய கனவுகளாய் இருந்தது
கானல் நீராய் ஆனா போதும்,
என்ன செய்ய, தனிமை தான் !
விரும்பிய எல்லாம் விலகி நின்று,
விரும்பாத ; தனிமை துணையான போது
என்ன செய்ய? ------------- !
- பாண்டியன்.க
தென்றலிலே தேனெடுத்துதேரோட்டி வந்தவளின் தேனருவி மேனியிலேதிகட்டாமல் குளித்திருந்தேன்ஆகாச மின்னலென... (Selvam)
26-Nov-2024 3:44 am
தென்றலிலே தேனெடுத்து
தேரோட்டி வந்தவளின்
தேனருவி மேனியிலே
திகட்டாமல் குளித்திருந்தேன்
ஆகாச மின்னலென
அங்கங்கள் நனைத்திருக்க
பாலாடை பளபளக்கும்
பூவாடை மேனியிலே
மேலாடை சரிந்திருக்க மோகத்தில் சாய்த்திருந்தேன்
பாராத விழியிரண்டால் பார்த்துவிட்டு தலைகுனிந்தேன்
வெட்கத்தில் அவளிருக்க
வெடிசிரிப்பில் நானிருக்க
சிவன்மலை தென்றலவள்
சிரித்துவிட்டு போககண்டேன்
கன்னிப்பூ தோப்பினிலே
கனியிரண்டை கண்டதிலே
நான்மறந்தேன் என்றனையே
நாணத்தில் தலைகுனிந்தவளால்
கண்ணாடி வளையலுந்தான் கையோடு கலகலக்க
என்னோட கையிரண்டும் இழுத்தணைக்க மெய்சிலிர்த்தேன்
கைநிறையப் பூவெடுத்து
கூந்தலிலே சூடிவைத்து காற்றான அவளழகை
காதலித்தேன் தென்றலென
பழுப்பு நிற பூனை தனது கருப்பு மற்றும் வெள்ளை... (தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன்)
17-Nov-2024 6:56 pm
பழுப்பு நிற பூனை தனது
கருப்பு மற்றும் வெள்ளை
பூனைக்குட்டிகளுக்கு பாலூட்டுகிறது
நாய் முறைக்கிறது.
அன்பென்ப அன்புக்கு அன்பாக மற்றாங்கேவன்பர்க்கு வன்பே பதில்.... (அன்புடன் மித்திரன்)
16-Nov-2024 6:57 pm
காற்றில்லா பூலோகத்தில் சிறகடித்து பறக்க ஆசைபேசத் தெரியாத சிறு... (🌻Pradeep Anitha🌻)
24-Oct-2024 7:43 am
காற்றில்லா பூலோகத்தில் சிறகடித்து பறக்க ஆசை
பேசத் தெரியாத சிறு குழந்தைகளிடம் பேசிப் பழக ஆசை
நாளைக்கு என்று இல்லாமல் இன்றே வாழ்ந்து விட ஆசை
என் மேல் கோபம் கொள்பவர்களிடம் சிரித்துப் பழக ஆசை
என் தாய் தந்தை அரவணைப்பில் சிறு குழந்தையாக மீண்டும் வளர ஆசை
என் ஆயுள் காலம் முழுவதும் இந்த இயற்கை கண்டு ரசிக்க ஆசையோ ஆசை..
மேலும்...