உண்மை நட்பின் வலி!!
பழகிய நாட்கள் பல...
அவனை விட்டு
விலகிய நாட்கள் சில...
சில நாட்களில் புரிந்துக்கொண்டேன்
அவன் நட்பின் அழகினை...
நட்பு எனும் வேடம் அனிந்து
சுயநலம் எனும் கவசம் அனிந்து
உடமை பொருள் என நட்பை நினைத்து
தேவை முடிந்ததும்
என் நட்பை...
தெருவில் எரிந்து
என்னை மறந்து
நட்பை பிளந்து
அன்பை இழந்து
நான் வேறு அவன் வேறு என காட்டிவிட்டான்...
சில நாட்கள் போதும்
அவன் என் மீது கொன்ட நட்பை மறக்க..
வெகு நாட்கள் வேண்டும்
அவன் மீது நான் கொன்ட நட்பை மறக்க...
கண்ணீருடன் அவன் உண்மை நண்பன்..