உன் நினைவு மட்டும் போதுமெனக்கு.!
உன் பேச்சை
காதல் பறவைகளுக்கு
காணிக்கை தந்து விட்டேன்.!
(0)
உன் மூச்சை
பூக்கள் மலர்வதற்கு
புண்ணியம் செய்து விட்டேன்.!
(0)
உன் அன்பை
அன்னையர் குலத்துக்கே
அர்ப்பனம் செய்து விட்டேன்.!
(0)
உன் பொறுமையை
பூமிக்கு கொஞ்சம்
புத்தி வரத் தந்து விட்டேன்.!
(0)
உன் பெருமையை
தமிழுக்குத் தயங்காமல்
தாரை வார்த்து விட்டேன்.!
(0)
உன் அறிவை
எல்லோரும் எடுத்துக் கொள்ள
எழுதிக் கொடுத்து விட்டேன்.!
(0)
உன் நினைவை மட்டும்
யாருக்கும் தராமல்
என்னோடே புதைத்துக் கொண்டேன்.!
****** ************* **************** ***************