அதன் பெயர்...

தென்றல் தலை சீவிச்சென்ற
மரங்களில்
முகம் துடைக்கின்றன
மேகக்கூட்டங்கள்..

அதில்
முத்துமுத்தாய் சிதறும்
வியர்வைத் துளிகளுக்கு
வேறு பெயர்தான்
குற்றாலத்தில்-
சாரல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jan-13, 9:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 89

மேலே