சுதந்திரம் எம் மூச்சு

தமிழா !தமிழா !
சுதந்திரத்தைக் கையிலே
வாங்கி இருக்கிறார்கள்
மனசிலே வாங்கவில்லை ..

தவறு செய்வதற்கு
சுதந்திரம் பெற்றவர்களாக
நினைக்கிறார்களே தவிர
சரியாக வாழ்வதற்கு
சுதந்திரம் பெற்றதாகக்
கருதவில்லை
வாழ்க்கைத் தரணியில் ..

சட்டத்திற்குக் கட்டுப்படுவதை
அடிமைத் தனமாகவும்
அநாகரிகமாகவும்
நினைக்கத் தொடங்கி விட்டார்கள்..

தான் சுதந்திரமாகவும்
தனக்குப் பிறர் அடிமையாகவும்
இருக்க வேண்டுமென்ற
மனப்பான்மை ஏராளமான
இளம் வேர்களுக்கும் தாகம்தான் ...

எதிர்காலத்தைப் பற்றி
எமக்கு மட்டும்
நிறைய சந்தேகங்கள்..
கனவாகுமோ ..?இல்லை நனவாகுமோ..?

மனிதாபிமானம் உள்ளவனாக
வளரவேண்டும் ...
மற்றவர்கள் என்னைப்போல்
மாற முயற்சிக்கிறேன் ..
ஆனால் தான் துன்பம் அடைந்தால்
அவர்கள் எப்படி போனால் என்ன
என்று ...
என்னால் நிம்மதியடைய முடியாது ..

பார்ப்போம் என்ற
மனோபாவம்
எவருக்கும்
வந்து விடக் கூடாது ...

கையில்
காசில்லாதது
வறுமை இல்லை ..

நம்மிடம்
மதிக்கத் தக்க
எந்தப் பண்பும் இல்லை
என்பதுதான் வறுமை ..

மனிதன் ,பறவை ,மிருகம்
எல்லா இனத்திலேயும்
போராட்டம்
நடந்துகொண்டுதான் இருக்கு..

போராட்டத்தில்
வெற்றி தோல்வி
இரண்டும் வரலாம்..
.
மனிதர்களின்
போராட்டத்தை
ஒடுக்குகின்ற சக்தியாக
அதிகாரம்,பணம்
ரெண்டும் இருக்கு..

ஆனால்..
இதை எதிர்க்க
பாதிக்கப் பட்டவங்க ஒருமுகமாக
செயல்பட்டு ஆகணும்..

போராட்டத்தை ஒருத்தன்
கையில் கொடுத்துவிட்டு
கூட்டமாக வேடிக்கை
பார்ப்பாங்க...

அந்த ஒருத்தன்
தண்டிக்கப் படும் போது
மவுனமாக அழுவாங்க..

ரெண்டு நாளில
மறந்தும் போவாங்க..
இதுதான் வாழ்க்கை ..

அப்புறம்
நினைவுநாள்
கொண்டாடுவாங்க ..

நியாயத்திற்காக
நாம் சார்ந்த
சமூகத்திற்காகப் போராடி
ஜெயிலுக்குப் போவதோ ..
தூக்குமேடை ஏறுவதோ ..
அவமான செயல் இல்லை..!

நியாயத்திற்காக மட்டும்
போராடுகிற சாதி
வரவரக் குறைந்து கொண்டே வருகிறது..

போராட்டம் என்பது
அழிக்க முடியாத
வைராக்கியத்தோட
மனசாலே செய்கிற காரியம்...

சில பேர் கலகத்தைப்
போராட்டம்னு
நினைத்துக் கொண்டு
இருக்கிறார்கள் ...

கலகங்கிறது உடம்பிலே
செய்கிற காரியம்
மனசிலே இல்லை
தமிழனே !!

எழுதியவர் : செயா ரெத்தினம் (22-Jan-13, 9:50 am)
பார்வை : 153

மேலே