கற்பனை நீ கவிதை நான் !

இலக்கியங்கள் பூக்களாய் இருந்தால்
அவற்றை மாலையாய் மாற்றினேன் !

வாயு புயலாய் வந்தால்
அதை தென்றலாய் மாற்றினேன் !

பூமி வெறும் மன்னாய் இருந்தால்
அதை பூக்கள் பூக்கும்
தோட்டமாய் மாற்றினேன் !

வானத்தின் நீலத்தை பறித்து உன்னை
அழகு படுத்த நீல ஆடையாய் படைத்தேன்!

ஆறுகள் கடலுக்கு செல்லும்போது அதை
திசை திருப்பி உன்மேல் பன்னீர் துளியாய்
தூவ வெயத்தேன் !

நிலாவையும் பசும்பாலினையும் நிறத்தை
குறைக்க சொல்வேன் நீ வெண்மையாய்
திகழ !

கற்பன்யாய் நீ இருந்ததால்
நான் கவிதையாய் வந்தேன் தமிழை அலங்கரிக்க !

எழுதியவர் : கோகுல் (24-Jan-13, 9:23 pm)
சேர்த்தது : K LAKSHMINARAYANAN
பார்வை : 87

மேலே