புகைப்பதில் இன்பம்
இழுக்க இழுக்க இன்பம் இதுதானா
இன்பத்தின் எல்லை புகையின் அளவிலா ?
ஆணும் பெண்ணும் சரி சமம்தான்
ஆனால் இதுவும் அதில் அடங்கிடுமா ?
வயது வரம்பில்லை புகைப்பிடிக்க
வாழும் உலகில் தடையுமில்லை !
மன நிறைவுக்கு மாற்று வழிஇருக்க
மகளிரும் மாற்றினர் ஊதிடும் குழலை !
மூதாட்டி இவரோ வாழ்வின் இறுதியில்
மூப்பே அடையா பருவ மொட்டுகளும்
பாதிப்பை அறியா சின்னஞ் சிட்டுகளும்
நாகரீக போர்வையில் நயமுடன் ஊதுகிறர் !
கலியுகம் என்கின்றனர் கேட்டால் நம்மிடம்
புதுயுகம் படைக்கும் புதுமைப் பெண்கள் !
இளைய தலைமுறை போகின்ற பாதையால்
நாளைய உலகின் நிலையே மாறிடுமோ ?
பழனி குமார்