கற்பிழந்தவள் .....

கற்பிழந்தவள் நான்
கவிதைக்கு சொந்தக்காரி...!
பொய்க்காதல் புலவனே...!
காரணமில்லாமல் வந்தாய்,
காந்த வார்த்தைகள்
கோர்த்து,
கண்டவுடன் கொண்டாய்
காதல் ஒன்றை...!
முற்பகல் பிற்பகலாய்
எப்பொழுதும்
நினைத்திருந்தேன்,
முழுக்காதலில்
மூழ்கி முட்டாள் ஆனவள்
நான்தானே...!
நல்லவன் நீயடா என்று
நினைத்துதானே...
விட்டுக்கொடுத்தேன்,
என்னை
தொட்டுக்கொள்ளடா என்று...!
தப்பானதே தவறுதலாக...!
இரவிலே பிறந்துகிடந்தேன்,
இராட்சச ரசிகா,
நம்மை மறந்துகிடந்தேன்...!
என்னையோ மறந்து சென்றாய்,
எங்கோ மறைந்து கொண்டு,
விடிந்தவுடன் கள்வன்
ஆனாயடா
நீ...!
என்னருகில் மட்டும்
பணமிருந்திருந்தால்
என்ன பெயரோ,
எனக்கென்ன பெயரோ...?
நல்லவேளை,
இன்றும் நான்
கற்பிழந்தவள்தான்...!

எழுதியவர் : விஜயராகவன் (28-Jan-13, 10:04 am)
சேர்த்தது : ragavanlazy
பார்வை : 91

மேலே