புள்ளிகளில் ஒளியும் பெரும்புள்ளிகள்

நேர்த்தியான வேண்டுகோளை
ஏற்கமறுக்கும்
பெரும்புள்ளிகளுக்கொரு படைப்பு

புள்ளிகளையே தேடி,
புள்ளிகளில் ஒளிந்து
புள்ளியாய் மறையத்துடிக்கும்
பெருப்புள்ளிகளே

புள்ளிகளை விட்டு
வெளியே வந்து
உலகை நோக்கும்
ஆர்வம் கொள்ளலாமா?

புள்ளி என்பது
தளம் தன்
நிர்வாகக் கட்டுப்பாட்டிற்காக
கொண்டு வந்திருப்பது!

அதை
ஆக்கிரமிக்க நினைக்கும்
எண்ணங்களை விட்டு
வெளியே வர முயலலாமே!

புள்ளிகளும், பழைய
பள்ளி எண்ணங்களும்
சிந்தனையில் தங்கிருக்கும்
அனிச்சை ஆக்கிரமிப்பால்
முன்னேறத் தயங்கும்
அன்பு நெஞ்சங்களே,

புள்ளி என்பது
எண்ணிக்கை மட்டுமே.
தரம் என்பது
உணர்வு தொடுவதே!

வேறுபாடு அறியும்
பகுத்தறிவு பெறலாமே!

புள்ளிகளின்
பெரும்பான்மை வைத்து
தர நிர்ணயம்
செய்ய விரும்பும்
உழைக்கும் கரங்களே,

சங்கடங்களை பகிர
தனி மேடை
நிர்வாக மேடை
படைப்பாளியின்
பக்கம் அல்ல!

உணர்வுகள் பகிர
தளத்தில் தனிவிடுகை

படைப்பை பற்றிய
கருத்துப் பகிர மட்டுமே
தளத்தின் கருத்து பகுதி.

தனிநபர்சார் உமிழ் பகுதி
அல்ல அது!

படைப்பாளி தருவது
படைப்பு மட்டுமே!
அதில்
புள்ளிகள் விழுவது
அவர்தம் கையிலோ?

புள்ளிகள் விழுமின்
குறுக்கு வழி எனும்
முத்திரை குத்துதலும்
தகுமோ?

போதுமே
இந்த போராட்டம்!

புள்ளிகள் விட்டு
வெளியே வந்து
நாம் இணையும்
கோடுகளாவது எப்போது!

வாரீர்!
புள்ளிகளை புள்ளிகளாகவே
இருக்க விட்டு

புள்ளிகளில் வியாபாரம்
செய்து பெரும்புள்ளிகளாகும்
கனவுகள் தவிர்த்து

நாம் கோடுகளாக
கை கோர்ப்போமே!.

இதற்கு பின்னும்
சிந்தனையில் இருந்து
புள்ளிகள் மறைய மறுப்பின்
அவை கரும்புள்ளிகள்
ஆகக் கடவது!

ஆமென்!

எழுதியவர் : மங்காத்தா (16-Feb-13, 2:42 pm)
பார்வை : 152

மேலே