மனித சங்கிலி,,,,
மனித சங்கிலி,,,,
அடைப்புகளில்லா
வெளிப்புறங்களில்
அலைப்பாய்ந்தோடும்
அதிசய ஆள் கூட்டம்
கரங்களை ராட்சத
இறக்கைகளாய்
சுழற்றி விரையும்
அகோர முகங்களில்
உயிர்க்கலவர பயங்கள்
மூடு பனி போல்
மிகையும் புகையினிலே
மெல்ல மெல்ல கரையும்
அவர்களின் எண்ணிக்கை
யாரிவர்கள்
என்று
யோசிக்கும் முன்னமே
மொத்தமாய்
உருக்குலைந்த
ரப்பர் பொம்மைகளாய்
மறைந்து போயினர்
அவர்களின் அப்பால்
முள்வேலியிட்ட
தரிசுக்காடுகளினூடே
கதறும் அவலங்கள்
அவர்கள் யாரோ,,,,!!
செவிக்கேட்கும்
அச்செந்தமிழ்
இரைச்சலில்
துளிகூட பயமில்லை
பசியில்லை,,,
உறக்கமில்லை,,,
அள்ளித்தெறிக்கும்
ஆயுதங்களாய்
அத்தீந்தமிழ்
செருக்கில்
விதைத்த வீரங்கள்
அத்தனையும்
பொங்கி எழுந்து
நகராது உயிரிழக்கும்
சம்பவங்கள்,,
விழுந்த
குருதிகளிலிருந்து
முழைக்கிறது
விதை நெல்லாய்
மீண்டுமொரு
சந்ததிகள்
பீனிக்ஸ் பறவைகளாய்
யாரை நம்பி இங்கு
யாருமில்லை
ஒரு கரம் இழப்பதன்
மூலமாய் மறுகரம்
சங்கிலியாய் இணைகிறது
காகிதக்கூற்றுகளில்
ஊற்றிவிட முடியாத
உணர்வுக் கூறுகளை
மனித சங்கிலியின்
மூலமாக சவாலாக
எடுத்துக் கொண்டிணைவோம்
வெட்டுப்பட்ட
கரங்களின்
குருதி சூட்டின்
வீரம் ஆறும் முன்பு ,,
மண்ணில் தோன்றிய
புல்லுருவிகளை
களையெடுப்போம்
தமிழுறவுகளே,,,,
அனுசரன்