கனவுகளில் காத்திருப்பு, கனவுகளே காத்திருப்பில் ....

கனகாலமாய் கோடி கோடி
கனவுகளை கண்களிலும்

கணங்களாய் கூடிக்கூடிடும்
கனங்களை இதயத்திலும் ஏந்தி

உறவையும், உடமையும் சமயத்தினில்
தம் உயிரையே இழந்திடினும்

ஆழ்கடலின் ஆழத்தினையே அசத்திடசெய்யும்
ஆழமான ஈழத்தின் காத்திருப்பு போன்று

கண்ணியமானதும்,மிக புனிதமானதும்
ஆழம்,அழுத்தம் இரண்டினிலும் உயர்ந்தது

என் கற்பனா தேவியே !
உனக்கான கனவுகளில் காத்திருப்பு ...!



மனிதயினம் தோன்றியதுமுதல் இன்றுவரை
அனைவருக்குமான ஒட்டுமொத்த காதலையும்
உத்தமியே !
உனக்காக கொட்டிவைத்து ஒப்படைத்தும்
இத்தனூண்டு கரிசனமுடன் கனவிலும் கூட
கனிமகள் உன் தரிசனம் தர மருப்பவளே !

காலகாலமாய் காதலரை காதலியர்
கனவுகளில் காத்திருக்க செய்வது கொடுமையே
இருந்தும்,
காதலிலிது இனிமையில் இழைத்த இனிமையே!

இவ்வாறு,கனவுகளில் காத்திருப்பு இயல்பென்றாயினும், காதல் கடலே !

எனக்கு மட்டும் ஏனோ ?
நின் கனவுகளே காத்திருப்பில் ??

எழுதியவர் : ஆசைஅஜீத் (29-Mar-13, 4:10 pm)
பார்வை : 102

மேலே