கருவறை - கல்லறை
இது மொட்டுக்களின் கூடு
அது சருகுகளின் வீடு ;
இது விடியலுக்கான இருட்டு
அது அஸ்தமன இருட்டு ;
இது காலக்கணக்கில் வரவு
அது காலத்தின் செலவு ;
இங்கே நீராரும் கடலுடுத்த ....
அங்கே ஜன கண மன ......
இங்கே வருகை வணக்கம்
அங்கே நன்றி வணக்கம் !!!!!