திருட்டு கவிதைகள் -3

அன்பே

உனது வெக்கத்திலும் இருக்கிறது
காதலுக்கே உரிய கள்ளத்தனம்
அதையும் கவிதையாய் வாசிக்க முயன்று
எல்லோர்க்கும் தெரிந்த கவிதையையே
திருடி உளறுகிறேன் என் கவிதையாய் ...

=============================================
அன்பே

எனக்கு கோவம் வரும் என்று நீயும்
உனக்கு பிடிக்காதது என நானும்
மறைக்கிறோம் சிலவற்றை
அங்கும் இருக்கும் போலித்தனம்
நம் காதல் மொழிகளில் அல்ல
நம் விழிகளில் .........
==============================================
அன்பே
விட்டு கொடுப்பதும் தட்டி பறிப்பதும்
காதல் சடுகுடு விளையாட்டில்
சகஜமான ஒன்றுதான் என்றாலும்
விட்டு கொடுக்கையில் சில பொய்களும்
தட்டி பறிக்கையில் சில் பொய்களும்
வந்து போவதும் கள்ளத்தனமான
கவிதைதான் காதலில் ............

எழுதியவர் : ருத்ரன் (6-May-13, 4:57 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 68

மேலே