எது நிரந்தரம்?

அரச பதவியும்
அதிகார ஆட்சியையும்
ஆட்டிவித்த மனிதனும் .............

அளவில்லா பணமும்
ஆங்கார குணமும்
அர்த்தமற்ற தற்பெருமையும் ..................

படித்த படிப்பும்
வாங்கிய பட்டமும்
பணிபுரிந்த வேலையும் .............

நேற்று தோற்றதும்
இன்று ஜெயித்ததும்
நாளைய எதிர்காலமும் ..............

ஏழ்மையும்
வசதியும்
இடைப்பட்ட நடுநிலையும் ..............

இளமையும்
முதுமையும்
இடைப்பட்ட வாழ்வும் ...........

இன்பமும்
துன்பமும்
இரண்டும் கலந்த வாழ்வும் ...........

அன்பும்
பகைமையும்
நடுவில் இணையும் இணைப்பும் ............

வெய்யிலும்
மழையும்
குளிருமாய் மாறும் இயற்கைபோல
எதுவும் நிரந்தரமில்லை
இந்த மனித வாழ்வில் .................

எழுதியவர் : வினாயகமுருகன் (17-May-13, 11:09 am)
பார்வை : 124

மேலே