கேள்வி என்னுது.... பதில் யாருடையதுங்க....?
உயிர் என்பது என்ன?
நிச்சயம விளங்க மறுக்கிறது.
சமீபத்தில், இதே தளத்தில்,
முகநூலில் இருந்த பெறப்பட்ட
ஒரு அதிசயத் தகவலை
படைப்பாளி கவிஞர் K இனியவன்
அளிக்க வாசிக்க கிடைத்தது.
கவிதை எண் 123736
400 ஆண்டுகளாக உறைந்து இருந்த
தாவர இனம் ஒன்று
மீண்டும் உயிர்ப்பிக்கிறதாம்
இதை அறிவியல் டுபாக்கூர் என்று
ஒதுக்கித் தள்ள மனம் வரவில்லை.
மேலும் இதில் ஆச்சர்யமும் வியப்பும்
வந்தாலும் அதையும் மீறி
ஆழ்ந்த உள்ளுணர்வில் ஒரு
நடுக்கம்தான் வருகிறது.
உயிர் என்பது என்ன?
அதன் குணாதிசயங்கள்தான் என்ன?
ஏதேனும் ஒரு பொருளில்,
வேதியியல் மாற்றம் ஏற்பட்டு,
வாயு, திரவம், திடம், ஒளி இவற்றின்
கலவையில் இயக்கம் தொடங்கும் ஒரு
சாதாரண பௌதீக நிகழ்வாக இதை
பார்க்க முடியவில்லையே.
உயிர் என்பது பிராணவாயு எனும்
உயிர்மூச்சை உளவாங்கும்போது
தொடங்கப்பட்டு அதை நிறுத்தும்போது
நின்றுவிடும் (மரித்து விடும்) ஒரு
இயக்கமாக நம்பப்பட்ட
கோட்பாடுகள் எல்லாம்
எங்கே போயின.
இந்த கோட்பாடுகள் இழந்த உயிரை
திரும்ப பெறமுடியாது என்றல்லவோ
அழுத்தமாக வாதாடுகின்றன.
அப்படியிருக்க,
உயிரை சேமித்து வைத்திருக்க
முடியும் என்றல்லவோ
இந்த மேற்கோள் காட்டிய
படைப்பில் உள்ள ஆராய்ச்சி
உணர்த்துகிறது.
அப்படியெனில்,
உயிர் என்பது,
உறைய வைக்கப்பட்டு,
சேமிக்கப்படக்கூடிய,
மற்ற நேரங்களில்
மீண்டும் எடுத்து
உபயோகிக்கக்கூடிய
ஒரு பொருளா?
ஏதேனும் ஒரு
புதிய வாழ்வுமுறைக்கு
இது பயன்படுமோ...
வேற்று கிரகங்களில்
உயிரை உருவாக்கவும்,
அங்கு மனித குலம் ஆதிக்கம்
செலுத்தவும்?
ஹூம்....
மலைப்பாக மட்டும் இல்லை.
சற்றே நடுக்கமாகவும் இருக்கிறது
இயற்கையை நினைத்தால்.
400 வருடங்களுக்கு பிறகு,
உறைந்த ஒரு பொருளுக்கு
உயிர் அளிக்கிறது என்றால்
இந்த சூர்ய சக்தியை
என்னவென்று சொல்வது
இதை உலகம் தோன்றிய
நிமிடம் தொட்டே
வழிபடும் மனித குலத்தை
என்னவென்று சொல்வது?
இந்த கேள்வி என்ன
ஆன்மீகத்தேடலா.....?