~~~~~~ அழகுடன் ஜொலிக்கும் இணையத்தளம் ~~~~~~
![](https://eluthu.com/images/loading.gif)
சிற்சில எழுத்துக் கொண்டே
பற்பல எழுத்து பயின்றேன் - இங்கு
பல கவிஞர்கள் கண்டு
தமிழ் மகிழ்வதை கண்டேன்
சுதந்தரமாய்ப் பல கற்பனைகள்
சிலிர்க்கும் கலை அழகினிடையே - இங்கு
சிறந்த கவி சிற்பிகள் மிகுந்த
சிந்தனை சிகரம் பல கண்டேன்
தாங்கி அழைக்க தாயுமுண்டு
நல்வழிப் படுத்தும் தந்தையுமுண்டு -இங்கு
அரவணைக்க அண்ணனுமுண்டு
தங்கமனம் கொண்ட தங்கையுமுண்டு
விந்தை வியக்கும் நட்புகளும்
வேதனை மறந்த உறவுகளும் -இங்கு
எத்தனை எத்தனை அதிசயமாய்
விண்ணினை மிஞ்சும் அளவினதாய்
கற்பனை கொண்டே கலைபடைத்து
எண்ணஙகளை இதழ் பதித்த -இங்கு
எத்தனையொரு பதிவுகள் பூத்ததடா
ஏங்கிய மனம் அமைதியானதடா
பார்வை விழியிரண்டால் நல்ல
பாங்குடனே எழுத்துவலை இணைந்து -இங்கு
வாஞ்சையுடன் முகமலர்ந்து மீண்டுமாய்
தஞ்சம் புகுவார் - நளினமாய்
பொன்னெழுத்து பதித்து தினமும்
பொக்கிஷமாய் காண்பார் பொழுதும் -இங்கு
அழகியதாய் மின்னும் கவிதை
மிளிர்ந்து அசைந்தாடும் அழகுடன்
விநோதமாய் கண்கள் வியந்து
எண்ணம் மயங்கி நின்றபலர் -இங்கு
எழுத்தினுள் நுழைந்து தன்னையிழந்து
எண்ணி எண்ணி மகிழ்வார்
செந்தமிழ்ச் சொல் கவிதையும்
பழந்தமிழ் சொற் கவிதையும் -இங்கு
தவழ்கிறது பல தலைப்புகளில்
பவள கற்க்களாய் ஜொலிக்கிறது
நற்தமிழ் இன்னுமாய் உயரும்
நல்லுள்ள எழுத்து நட்புகளால் - இங்கு
இணையும் ஒவ்வொரு எழுத்தும்
இணையத்தை மிஞ்சும் ஓருநாள்
- நெல்லை பாரதி