கர்வம்..!

இரண்டு அண்ணன்களோடு பிறந்த
என் தோழியை நான் தற்செயலாய்
கடை வீதியில் கண்டேன்
பரஸ்பரம் பாரிமாரிக் கொண்டதில்
அவளுக்கு இரண்டு ஆண் குழந்தையும் எனக்கு இரண்டு பெண் குழந்தையும் இருப்பதையும் கூறிக் கொண்டோம் ."என்னது இரண்டுமே பெண்ணா வருங்காலத்துல ரொம்ப கஷ்டப்பட போரடி" என ஏளனமாய் கேட்டாள்..எனக்கு பதில் சொல்ல
தெரியவில்லை..முடிந்தவரை எல்லாம் பெசிகொண்டோம்...இறுதியாய் அவள் அம்மாவை பற்றி விசாரித்தேன்.."அம்மா என்கூட தான் இருக்குறாங்க அண்ணன்க பாத்துக்க
மாட்டேன்னு சொல்லிட்டாங்க என்ன பண்றது எங்க அம்மா பட்ட கஷ்டம் பொண்ணா பிறந்த எனக்கு தான தெரியும் அதான் நானே பாத்துக்கிறேன்.."..என்று கூறி விட்டு கிளம்பினாள்.. என்னமோ தெரியவில்லை அதன் பிறகு என் பெண் குழந்தைகளை நினைத்து அதிக பட்ச கர்வத்துடன் நடக்க தோன்றியது எனக்கு ..

எழுதியவர் : kavithayini (26-Jun-13, 6:15 pm)
சேர்த்தது : சத்யப் பிரியா
பார்வை : 234

மேலே