சிட்டுக்குருவி ..
சிறுப் பிள்ளையானாலும் சிட்டுக்குருவியாக சுற்றித்திரிந்த காலம் அது
கல்வி கூண்டில் அடைப்பட்ட பறவை ஆனாலும்
பரவசத்துக்கு குறை இருந்ததில்லை
காலம் கனிவாக பார்த்தது அந்த கனி கசப்பில்லாமல் கரைந்தது.
கால்கள் தனியாக கழங்டோடிய ஆட்டங்கள் எவ்வளவோ,அதை எண்ணி சந்தோஷம் கொள்ளும் நாட்கள்தான் இதுவோ
சிற்றேறும்பாய் சுற்றித்திருந்த காலம் இன்றும் சில்லென்று தென்றலாய் வீசி செல்கிறது