திருமணம்

வளாக நேர்முகத்தில் தேர்வு பெற்ற மாணவ மாணவியருக்கு
நியமனங்களை வழங்கும் விழா அமர்க்களப்பட்டுக்
கொண்டிருந்தது.
-
மதிய உணவுக்குப் பின் கலந்துரையாடல். அதன்பின் யார்
யாரோ மேடை ஏறிப் பேச கடைசியாக பேசினார் கல்லூரி
நிறுவனத் தலைவர்.
-
“உங்க எல்லோருக்கும் ஒண்ணு சொல்றேன். வேலைக்கு
போங்க, வேணாங்கல, ஆனா உடனே கல்யாணம் பண்ணிக்குங்க.
அதுதான் நல்லது. குடும்பமா இருந்தாதான் பரிவு பாசம்
அன்பு எல்லாம் இருக்கறதோட வேலைலயும் கவனம் செலுத்த
முடியும்.’
-
புரியாமல் பார்த்த மாணவர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.
இறங்கி வந்த நிறுவனரிடம் கேட்டார் சிறப்பு விருந்தினர்.
“என்ன சார், இப்படி பேசிப்புட்டிங்க. வேலை கிடைச்சதும்
கல்யாணம் பண்ணிக்கணுமா, அதனால என்ன ஆகப் போவுது?’
-
“என்ன ஆகப்போவுதா? நகரத்துல நாலு கல்யாண மண்டபம்
கட்டி வைச்சிருக்கேன். அஞ்சு விளையாட்டுப் பள்ளி, துவக்கப்
பள்ளி, உயர்நிலைப் பள்ளினு கட்டி வைச்சிருக்கேனே.
இதுங்க கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டிகளை பெத்துப்
போட்டா தானே எனக்கு வருமானம் என்ன நான் சொல்றது!’
-
சிறப்பு விருந்தினருக்கு மயக்கம் வந்தது.

எழுதியவர் : ஆர் கே ராஜ் (6-Jul-13, 8:37 pm)
சேர்த்தது : Rajavel Kaliyamoorthy
பார்வை : 267

மேலே